Content Creation {உள்ளடக்க உருவாக்கம்} என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பிறருக்கு அரியச் செய்வதற்காக உருவாக்கப்படும் உள்ளடக்கமாகும். இது பெரும்பாலும் காணொளி உள்ளடக்கம், ஒலி வடிவ உள்ளடக்கம் மற்றும் எழுத்து வடிவ உள்ளடக்கம் என மூன்று வகைகளைக் கொண்டிருக்கும்.
இதைப்பற்றி நான் பிரத்யேகமாக எழுதக் காரணம், பெரும்பாலான content creator-கள் தன்னுடைய ஆர்கஸத்தை விரைவில் இழந்து விடுகிறார்கள். இது உண்மையான சலிப்பு அல்ல, நம்மிடம் எழுதுவதற்கான போதிய content இல்லை என்பதே உண்மையான ஒன்று. அல்லது ஒரே விஷயத்தை ஒரே மாதிரி எழுதுவதால் கூட இது ஏற்படலாம்.
இந்தப் பதிவு நிச்சயம் உங்களுக்கு ஓர் தெளிவை ஏற்படுத்தும் என நம்புகிறேன். நீங்கள் எப்படிப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டுமானாலும் தற்போது நான் கூறும் விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்.
முதலில் நீங்கள் எந்த ஒரு உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டுமானாலும்
என்ன?
எப்படி?
ஏன்?
இந்த மூன்று கேள்விகளையும் அடிப்படையாகக் கொண்டு, உருவாக்க முடியும்.
என்ன?
என்ன என்பது, முதலில் நீங்கள் எது சார்ந்த உள்ளடக்கத்தை உருவாக்கப் போகிறார்கள் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். என்ன செய்யப்போகிறீர்கள் என்பது தெரியாமல் அதற்கு அடுத்த நிலைகளை நீங்கள் அடைய முடியாது. அறிவுரைகூற போகிறீர்களா, கோபத்தை வெளிப்படுத்தப் போகிறீர்களா, ஏதேனும் ஒன்றை புரிய வைக்கப் போகிறீர்களா, வாழ்க்கை அனுபவங்களைப் பகிர போகிறீர்களா என சரியான ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
எப்படி?
நீங்கள் என்ன என்பதைத் தேர்வு செய்து பிறகு, அதை எப்படி ஒரு உள்ளடக்கமாக மாற்றப் போகிறீர்கள் என சிந்திக்க வேண்டும். உள்ளடக்க உருவாக்கத்தில் இதுதான் மிகவும் முக்கியமான படி. ஏனென்றால் இதுதான் உங்களுடைய உள்ளடக்கத்தை எதுபோன்று உங்கள் பார்வையாளர்களுக்கு புரிய வைக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானம் செய்கிறது.
கதை கூறி விளங்கவைக்கப் போகிறீர்களா?
ஏதேனும் ஒரு எடுத்துக்காட்டு கூறி அறியச் செய்யப் போகிறீர்களா?
சிறு சிறு புள்ளிகளாக தொடுக்கப் போகிறீர்களா?
இல்லை ஏதேனும் ஒரு வாழ்க்கை நிகழ்வோடு ஒப்பீடு செய்து தெளிவுபடுத்த போகிறீர்களா?
என, உங்களுடைய கற்பனைத் திறன் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு உள்ளடக்கத்தை கட்டமயுங்கள். இதில் பெரும்பாலும் நீங்கள் எதுபோன்ற நபர்களுக்காக உள்ளடக்கத்தை உருவாக்குகிறீர்கள் என்பதை சிந்தித்து, அதற்கு ஏற்றவாறு உருவாக்குங்கள். ஏனென்றால் விவசாயம் சார்ந்த உள்ளடக்கத்திற்கு, ராக்கெட் சயின்ஸ் உதாரணம் தேவையற்றது.
ஏன்?
இறுதியாக நான் ஏன் இந்த உள்ளடக்கத்தை உருவாக்குகிறேன் என்ற கேள்விக்கான பதில் மிக மிக முக்கியம். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம் அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்க வேண்டாம்.
நான் ஒரு பொறியாளனாக இருந்துகொண்டு மருத்துவம் சார்ந்த குறிப்புகளைக் கொடுத்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
அதே போன்றுதான் நாம் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கு, அதற்கு உரிய தகுதி நமக்கு இருக்கிறதா? என்று பயனர்கள் எதிர்பார்ப்பார்கள். தகுதி இல்லை என்றாலும் அதற்குரிய நம்பகத்தன்மையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. எனவே உங்களுடைய உலகத்திற்கான நம்பகத் தன்மையை உருவாக்கும் வகையிலான வார்த்தைகளை அதில் இணைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எது சார்ந்த உள்ளடக்கத்தை உருவாக்கினாலும் இந்த மூன்றை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கினால், நிச்சயம் அது ஒரு முழுமையான உள்ளடக்கமாக அமைய வாய்ப்புள்ளது. இதை நீங்கள் அறிந்து கொள்வதன் மூலம் எந்த ஒரு உள்ளடக்கமாக இருந்தாலும் அதை எளிமையாகக் கட்டமைக்க முடியும்.