இந்திய மாணவர்கள் உருவாக்கிய அசத்தல் ரோபோ

இந்திய மாணவர்கள் உருவாக்கிய அசத்தல் ரோபோ

சூரத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் கொண்ட குழு, மனிதனைப் போலவே நடக்கக்கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளனர். இந்த புதுமையான ரோபோ அதன் செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் பல நோக்கங்களுக்காக இதை பயன்படுத்தலாம் என சொல்கிறார்கள். இதன் சிறப்பு என்னவென்றால் இது வெறும் 25 நாட்களில் 30000 செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவைப் பயன்படுத்தி ரிக்ஷாவை இழுத்துச் செல்லும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மனித கால்கள் மற்றும் அவை எவ்வாறு செயல் படுகின்றன என்பதை ஆய்வு செய்த பிறகு இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது என இத்திட்டத்தின் பின்னணி யிலுள்ள மாணவர்களில் ஒருவரான 'மௌரியா சிவம்' விளக்கமளித்துள்ளார். "இது எங்களின் முன்மாதிரி வடிவம் தான். இது இன்னும் முழுமை அடையவில்லை அதன் கால் கை தலை மற்றும் முகம் ஆகியவற்றில் இன்னும் வேலை செய்ய வேண்டி உள்ளது. ஒரு சாதாரண மனிதன் எப்படி நடக்கிறானோ அதைப்போலவே இதையும் உருவாக்க முயற்சி செய்துள்ளோம்", என அவர் தெரிவித்தார்.

இந்த இளம் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் திறமைக்கு இந்த புதுமையான ரோபோ ஒரு சான்றாகும். இந்த ரோபோ பல நோக்கங்களுக்காக வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தும் என அவர்கள் நம்புகிறார்கள். உலகை நேர்மறையான வழிகளில் மாற்றம் ரோபோடிக்ஸ்-ன் திறமையை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் இது உள்ளது. இது ஒரு தொடக்கநிலை முன்மாதிரி ரோபோவாக இருந்தாலும் இதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் நம்பிக்கை யளிக்கும்படி இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கி றார்கள். 

இணையதளத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரே ரோபோ இதுவல்ல. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட மனித உருவ ரோபோவான 'Atlas' அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த ரோபோ அதன் ஆற்றல் மிக்க திறன்களுக்கு மிகவும் பெயர்போனது. அதன் துல்லியமான அசைவுகளால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட ஒரு காணொளியில், மேல் தளத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளி, தனது டூல்ஸ் பையை எடுத்துத் தரும்படி அட்லஸிடம் கேட்கிறார். அந்த டூல்ஸ் பேக்கை கையில் எடுத்த Atlas, மேலே செல்ல வழி இல்லாத போதிலும், ஒரு பலகையை எடுத்து வழியை உருவாக்கி, மேலே சென்று அந்த பையை அந்நபரிடம் கொடுக்கிறது. பின்னர் கீழே இறங்கும்போது அசாதாரண முறையில் பல்டி அடித்து கீழே இறங்குகிறது. 

இந்த காணொளியைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் இது என்னவெல்லாம் செய்யப் போகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com