Cyber Security நடைமுறைகள்: டிஜிட்டல் சொத்துக்களை பாதுகாக்கும் முறை!

Cyber Security
Cyber Security

இன்று முற்றிலும் மாறிவிட்ட நவீன உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் நமது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் Cybersecurity எனப்படும் இணையப் பாதுகாப்பு முன்பை விட மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இணையத் திருட்டு அதிகரித்துள்ளதால், தனிப்பட்ட தகவல், நிதித் தரவுகள் மற்றும் அறிவுசார் சொத்துக்கள் உட்பட டிஜிட்டல் சொத்துகளுக்கு குறிப்பிட்டத்தக்க ஆபத்துக்கள் உள்ளன. எனவே தனிப்பட்ட நபர்களின் டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் விவரங்களை பாதுகாக்க எதுபோன்ற Cybersecurity நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

1. வலுவான பாஸ்வேர்ட்: உங்கள் டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாக்க அடிப்படையான விஷயங்களில் ஒன்று, அது பாதுகாக்கபட்டிருக்கும் ஆன்லைன் கணக்குகளின் பாஸ்வேர்டை கடினமாகவும், தனித்துவமாகவும் வைக்க வேண்டும். குறிப்பாக பாஸ்வேர்டுகளுக்கு பிறந்தநாள், செல்லப் பெயர்கள் போன்ற பிறர் எளிதாக யூகிக்கக்கூடிய தகவல்களைப் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக எண்கள், எழுத்துக்கள், *, # போன்றவற்றை கடவுச்சொற்களாகத் தேர்வு செய்யவும். 

2. Multi Factor Authentication: இதை செயல்படுத்துவதால் உங்கள் ஆன்லைன் கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகிறது. அதாவது உங்கள் கணக்கை லாகின் செய்ய கைரேகை, OTP போன்ற கூடுதல் Authentication முறைகளைப் பயன்படுத்தவும். 

3. மென்பொருளை அப்டேட் செய்யுங்கள்: நீங்கள் பயன்படுத்தும் கணக்குகள் மற்றும் சாதனங்களை அவ்வப்போது புதிய மென்பொருளுக்கு அப்டேட் செய்து வைத்துக் கொள்வது நல்லது. இதன் மூலமாக உங்களது தகவல்கள் மற்றும் முக்கிய விவரங்கள் திருடப்படும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது. 

4. Phishing முயற்சிகளில் கவனமாக இருங்கள்: Phishing தாக்குதல் என்பது, நமது தகவல்களைத் திருட சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் ஒரு பொதுவான முறையாகும். இதில் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றிற்கு லிங்குகளை அனுப்பி ஏமாற்றம் முயல்வார்கள். எனவே முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து, லிங்குகளை கிளிக் செய்ய வேண்டும் என மெசேஜ்கள் அல்லது ஈமெயில் வந்தால், ஒருபோதும் அதை கிளிக் செய்து உள்ளே செல்லாதீர்கள். 

இதையும் படியுங்கள்:
Oscar 2024: விருதுகளை அள்ளிச் சென்ற Oppenheimer மற்றும் Poorthings படங்கள்!
Cyber Security

5. பாதுகாப்பான Wi-Fi நெட்வொர்க்: உங்கள் வைஃபை நெட்வொர்க்கை பாதுகாப்பாக பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக வீடு மற்றும் அலுவலகத்தில் வைஃபை நெட்வொர்க் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும். பொது இடங்களில் கிடைக்கும் இலவச WiFi-ல் ஒருபோதும் உங்கள் சாதனத்தை இணைத்து பயன்படுத்தாதீர்கள். இதைப் பயன்படுத்தியும் உங்களது தகவல்கள் திருடப்படலாம். 

6. Anti-Virus பயன்படுத்தவும்: உங்கள் சாதனங்களில் புகழ்பெற்ற ஆன்டிவைரஸ் மென்பொருளை நிறுவி, பாதுகாப்பாக இயக்கவும். இது பெரும்பாலும் தேவையில்லாத விஷயங்களை உங்கள் சாதனத்திலிருந்து நீக்குகிறது. இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் வைரஸ்கள், Ransomware மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகல் முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com