சிலிண்டர் லீக் ஆவதைத் தெரியப்படுத்தும் பல்ப்!

சிலிண்டர் லீக் ஆவதைத் தெரியப்படுத்தும் பல்ப்!

ந்தையில் இருக்கும் பெரும்பாலான ஸ்மோக் அலாரங்கள் பொதுவாக புகையை மட்டுமே கண்டுபிடிக்கும். ஆனால் இந்த புதிய சாதனத்தால் புகை மற்றும் எல்பிஜி கசிவைக் கூட கண்டுபிடிக்க முடியும். இதன் பெயர்தான் Halonix Shield Fire Alarm. வீட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இந்த அலாரத்தைப் பொருத்தலாம். ரூபாய் 700 விலையிலேயே அமேசானில் இது கிடைக்கிறது. 

பெரும்பாலான மக்கள் புகையைக் கண்டுபிடிக்கும் கருவியை வீடுகளில் பொருத்துகிறார்கள். வீட்டில் ஏதாவது தீப்பிடித்தால், அதில் வரும் புகையை இந்த சாதனம் உணர்ந்து, அலாரம் எழுப்பி மிகப்பெரிய சேதத்தைத் தவிர்க்க உதவுகிறது. ஸ்மோக் டிடெக்டர்கள் வீட்டில் எங்கே தீப்பற்றினாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து, சரியான நேரத்தில் தீயை அணைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. 

இந்த சாதனம் வெறும் புகையை மட்டுமே கண்டுபிடிப்பதால், கேஸ் கசிவு போன்றவற்றைக் கண்டுபிடிக்க இதில் எந்த அம்சமும் இல்லை. இருப்பினும் தற்போது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்ட நிலையில், சந்தையில் ஒரு புதிய சாதனம் வந்துள்ளது. இது புகையை மட்டுமின்றி, கேஸ் கசிவையும் உணர்ந்து அலாரம் எழுப்பி எச்சரிக்கிறது. 

பெரும்பாலும் கேஸ் கசிவு சமையலறையிலேயே நிகழ்கிறது. பல நேரங்களில் இது மிகவும் ஆபத்தாக மாறிவிடுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டே இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது எனலாம். வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்டால் சில நிமிடங்களில் இந்த சாதனம் அதைக் கண்டறிந்து எச்சரிப்பதால், மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

இந்த சாதனம் எங்கே கிடைக்கும்? 

மேசான் வலைதளத்தில் இந்த சாதனத்தை ரூபாய் 700 கொடுத்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அல்லது இந்த நிறுவனத்தின் நேரடி வலைதளத்திலும் ஆர்டர் செய்யலாம். இந்த சாதனத்தால் எல்பிஜி, புகை, கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோஜன், பியூட்டேன், எத்தனால், ப்ரொப்பேன், மற்றும் மீத்தேன் போன்ற பலவிதமான கேஸ் கசிவுகளை கண்டறிய முடியும். பார்ப்பதற்கு பல்பு போலவே உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தை, எந்த ஒரு சாதாரண பல்பு ஹோல்டரிலும் மாட்டிக் கொள்ளலாம். அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பல்ப் ஹோல்டருக்கு ஏற்ற வகையிலும் இதை வாங்கிக் கொள்ளலாம். 

இதை ஹோல்டரில் மாட்டியவுடன் இதிலிருக்கும் பட்டனை ஆன் செய்தால், சிவப்பு எல்இடி விளக்கு விட்டு விட்டு எரியும். அதன் பின்னர் சில நிமிடங்களில் இந்த சாதனம் கசிவைக் கண்டறியும் வேலையைத் தொடங்கிவிடும். ஒருமுறை இதனால் கசிவு கண்டறியப்பட்டு ஒலி எழுப்பப்பட்டால், அந்த அறையில் கசிவின் தாக்கம் குறையும் வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். இதை யாராலும் இடையில் நிறுத்த முடியாது. 

வீட்டில் கசிவு எங்கே ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து, இதை அங்கே பொருத்துவது நல்லது. இதனால் தீ விபத்துக்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு விபத்துக்கள் தடுக்கப்படும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com