தீபாவளி நேரத்தில் போன்களின் விலை குறையக் கூடும், ஏராளமான சலுகைகளும் இலவசங்களும் இதனுடன் கிடைக்கும் என்பதால், பண்டிகை காலங்களில் புதிய ஸ்மார்ட் போன்களை வாங்க அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள். தற்போது விற்பனை ஆகும் ஸ்மார்ட் போன்களில் சிறந்தது எது? என்பது ஒப்பீட்டளவில் கண்டறிவது கடினமான செயலாக இருக்கும், ஒவ்வொரு போனும் தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்டு தங்களின் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. இதில் சிறந்த 10 ஸ்மார்ட் போன்களை பார்க்கலாம்.
உறுதியிலும் தரத்திலும் சாம்சங் எப்பவுமே முதன்மையான இடத்தில் இருக்கிறது, இதன் நம்பகத் தன்மையே இதன் வெற்றிக்கு காரணம். 4700 mAh பேட்டரியுடன் 25W வேகமான சார்ஜிங் வசதி கொண்ட சார்ஜருடன் கிடைக்கிறது.
256 ஜிபி மேமரியுடன் 8 ஜிபி ரேம் வேகமாக செயல்பட உதவுகிறது. 50 MP + 12 MP + 8 MP பின்புற கேமரா மற்றும் 10 MP முன்பக்க கேமரா அழகான புகைப்படங்களை எடுக்க ஆதரவு தருகிறது. 6.7 இன்ச் AMOLED 2x திரை பிரகாசமாக உள்ளது. சந்தையில் அதிகம் விற்பனையாகும் இந்த மொபைல் ₹30,000 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
அதிவேக கவால்காம் ஸ்னாப்டிராகன் 8s Gen 3 பிராசாசர், 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி செயல் திறனுடன் இயங்கும் மொபைல் இது.
6.5 இன்ச் 1.5K AMOLED, பளிச் என்ற திரையுடன் விரைவான இண்டர்நெட் செயல்பாட்டுடன் வேலை செய்கிறது. வழக்கமான திறனுடன் கூடிய 50MP + 50MP + 12MP பின்புற கேமரா மற்றும் 32MP முன்புற கேமராவுடன் சந்தைக்கு வந்துள்ளது. இதன் பேட்டரி திறன் 4700mAh அளவு தான் என்றாலும் ஒருநாள் முழுக்க வருகிறது. இதன் விலை ₹27,000 இல் ஆரம்பமாகிறது.
எளிமையாக பயன்படுத்த விலை மலிவான அம்சமும் கொண்ட ரியல்மீ நிறுவனத்தின் அதிக பேட்டரி திறனுக்கான படைப்பு இது .120W சார்ஜிங் திறனுடன் 7000mAH முரட்டு பேட்டரியுடன் கிடைக்கிறது.
6.8 இன்ச் பெரிய திரையுடன் 50MP + 8MP பின்பக்க கேமராவுடன் 32MP முன்புற கேமராவுடன் கிடைக்கிறது. கேமிங் வசதியை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்த போனாக இருக்கும். இதன் விலை ₹29,999 இல் ஆரம்பமாகிறது.
சாம்சங் நிறுவனத்தின் நீடித்த உழைப்பிற்கு ஏற்ற இன்னொரு மொபைல். பாதுகாப்பான 5000mAH பேட்டரியுடன் கிடைக்கிறது.
6.6 இன்ச் பெரிய திரையுடன் 50MP + 12MP + 5MP பின்பக்க கேமராவுடன் 32MP முன்புற கேமராவுடன் கிடைக்கிறது. சாம்சங் தெளிவான போட்டோ வசதிகளுக்கு பெயர் பெற்றது. சந்தையில் இந்த மொபைல் ₹24,500க்கு கிடைக்கிறது.
90 வாட்ஸ் சார்ஜிங் திறனுடன் 6500 mAh பேட்டரி மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ பிராசருடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முதல் சிறப்பு அம்சமே 200MP பின்பக்க கேமரா உள்ளது தான். முன்புற கேமரா 50 MP திறன் கொண்டது. அதிக தெளிவு நிலை கேமரா பயன்பாட்டிற்கான மொபைல் போனாக இது உள்ளது. மற்றபடி 6.7 இன்ச் டிஸ்ப்ளே 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ராம் வேகத்துடன் கிடைக்கிறது. இதன் விலை ₹29,999 ஆகும்.
6.67 இன்ச் AMOLED திரையுடன் 120Hz புதுப்பிப்பு வேகத்தில் கேம் பயன்பாட்டிற்காக, டைமன்சிட்டி 8400-அல்ட்ரா பிராசசருடன் வெளிவந்த மொபைல் போன் இது. இது 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் வேகத்தில் இயங்க கூடியது. 6000mAh கூடிய பேட்டரி நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஆதரவு தருகிறது. இதன் 50MP + 8MP பின்புற கேமரா மற்றும் 20MP முன் கேமரா தெளிவாக புகைப்படங்கள் எடுக்க ஏற்ற வகையில் உள்ளது. இதன் விலை ₹26,500 ஆகும்.
இது ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்ட சிறந்த மொபைல் ஆகும். இந்த வடிவமைப்பு தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. மீடியாடெக் டைமண்ட் சிட்டி 8350 Apex பிராசசரால் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் வேகத்துடன் 256 ஜிபி மெமரியை கொண்டுள்ளது.
இதுவும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருந்தாலும் அதன் சூப்பர் ஃப்ளூயிட் AMOLED, FHD+ திரை சிறந்த அனுபவத்தை தரும். பின்புற கேமரா 50MP+ 8MP தெளிவு திறனும், முன் கேமரா 16 MP திறனுடன் சிறப்பான அனுபவத்தை தருகிறது. இதன் ஆரம்ப விலை ₹27,000 த்தில் தொடங்குகிறது.
இதன் விலைக்கு ஏற்ற சிறந்த டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட 50MP + 50MP + 2MP பின்புற கேமராவும் முன்புறம் 32MP செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. திடமான பேட்டரி ஆயுள் 6500 mAh திறன் கொண்டது. ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 பிராசசருடன் 8 ஜிபி ரேம் வேகம் கொண்டது. இது ₹26,000 விலையில் கிடைக்கிறது.
6.7 இன்ச் அமோல்ட் FHD டிஸ்பிளே உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி பிராசசர் உடன் சந்தைக்கு வந்துள்ளது. பின்புறம் 50MP + 2MP கேமராவுடன் முன்புறம் 32MP திறன் கொண்ட கேமராவும் நிறுவப்பட்டுள்ளது. வேகமான சார்ஜிங் மட்டும் நீடித்த பேட்டரிக்காக 7000mAh திறனுடன் 80W சார்ஜருடன் கிடைக்கிறது. இதன் அடிப்படை விலை ₹27,000 த்தில் ஆரம்பமாகிறது.
மோட்டோவுக்கு என்று தனி ரசிகர் வட்டாரம் இன்று வரை உள்ளது. தெளிவான டிஸ்பிளே மற்றும் உயர்தர கேமரா தான் மோட்டோவின் சிறப்பம்சம். பின்புற கேமரா 50MP + 50MP + 10 MP திறன் கொண்டது. முன்புற கேமரா 50MP தெளிவு திறன் கொண்டது. 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ராம் வேகம், 6000mAh உயர்திறன் பேட்டரி நிறுவப்பட்டது. இதன் விலை ₹27,000 இல் ஆரம்பமாகிறது.