நாம் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களா?

Mars
Mars
Published on

பூமியில் உயிர்களின் தோற்றம் குறித்து விஞ்ஞானிகளிடையே பலவித கருத்துக்கள் நிலவி வருகின்றன. சமீபத்திய ஆய்வின்படி பூமியில் உயிர்களின் தோற்றம் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மில்லியன் ஆண்டுகள் மிகவும் பழமையானது. சுமார் 4.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். பூமியில் பரிணாமம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகத் தொடங்கி இருந்திருக்கலாம்.

விஞ்ஞானி எட்வர்ட் மூடி மற்றும் அவரது குழுவினர் பூமியில் மனிதர்களின் மிகப் பழமையான மூதாதையரின் (LUCA ) வயது 4.09 முதல் 4.33 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர்.

இதுவரை கிடைத்த புதைபடிவ பொருட்களை ஆய்வு செய்ததில் மதிப்பிடப்பட்டதை விட இவை பல நூறு மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி சரியானது என்று நிரூபிக்கப்பட்டால், 4.1 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு கனிமத்தில் உயிர்களின் தடயங்களைக் கண்டறிந்த விஞ்ஞானி எலிசபெத் பெல்லின் முந்தைய ஆய்வை இது உறுதி செய்யும்.

3.8 முதல் 4.1பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் தொடர்ந்து விண்கற்கள் மற்றும் எரிகற்கள் மழை பெய்த காலம்.

இப்போது சில விஞ்ஞானிகள் விண்மீன் மழை, எரிகல் மழைக் காலம் குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர். இந்த மோதல்கள் பூமியை முற்றிலுமாக அழித்து அதன் பின்னர் உயிர்கள் தோன்றியதா? அல்லது அதற்கு முன்னர் உயிர்கள் தோன்றி இருந்ததா என்பதே இந்த ஆராய்ச்சி. இந்த விண்மீன் தாக்குதல் காலத்திற்கு பின்னர் தான் பூமியில் வாழ்க்கை தொடங்கியது என்று இதுவரை நம்பப்பட்டது. இப்போது கடுமையான சூழ்நிலைகளிலும் மனித மூதாதையர்கள் (LUCA ) உயிர் பிழைத்திருக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
விமானத்தில் பயணிக்கும் போது போனை Airplane Mode-ல் வைக்காவிட்டால் ஆபத்தா? அப்படி என்னதான் ஆகும்?
Mars

இந்தக் கண்டுபிடிப்பு பூமியில் உயிர்களின் தோற்றம் பற்றிய கதையை முற்றிலுமாக மாற்றி விடும். மேலும் மற்ற கிரகங்களிலும் உயிர்களின் தோற்றம் பற்றி அறிய வாய்ப்பினை ஏற்படுத்தும்.

பூமியில் உயிர்கள் தோன்றியது பற்றி மற்றொரு கேள்வியும் எழுந்தது. உயிர்கள் பூமியில் தோன்றியதா, அல்லது அது வேறொரு கிரகத்திலிருந்து வந்ததா? என்பதுதான். இந்தக் கருத்து 'பான்ஸ்பெர்மியா' கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டின் படி, உயிர்கள் வேறொரு கிரகத்தில் பரிணாம வளர்ச்சியடைந்து விண்கற்கள் வழியாக பூமியை வந்தடைந்திருக்கலாம் என்பதுதான்.

இந்த கோட்பாட்டை சிலர் நிராகரிக்கின்றனர். விண்கற்கள் பயணித்து வர பலநூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், செவ்வாய் போன்ற அருகில் உள்ள கிரகத்தில் இருந்து உயிர்கள் பூமிக்கு வந்திருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
கனவுகள் பலிக்குமா?
Mars

செவ்வாய் கிரகமும் பூமியும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உருவானவை. ஆனால் செவ்வாய் மிக விரைவாக குளிர்ந்தது. செவ்வாய் கிரகத்தின் ஆரம்ப நாட்களில் ஏராளமான நீர் இருந்ததாக அறிவியல் பதிவுகள் காட்டுகின்றன. அதாவது அது உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருந்திருக்கலாம். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் முதலில் உருவாகி, பின்னர் விண்கல் வழியாக பூமியை அடைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக பூமியில் நூற்றுக்கணக்கான செவ்வாய் கிரக விண்கற்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பான்ஸ்பெர்மியா கோட்பாடு சரியாக இருந்தால், பூமியில் உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தன என்று முடிவுக்கு வரலாம். இருப்பினும், இது குறித்த ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. எதிர்காலத்தில் உறுதியான சான்றுகள் கிடைத்தால், அது பிரபஞ்சத்தைப் பற்றிய நமது பார்வையை முற்றிலுமாக மாற்றிவிடும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com