தராசுத் தகவல்கள்!

Types of weighing scale
weighing scale
Published on

ராசு (Weighing Scale) என்பது பொருளின் எடையை அளவிடப் பயன்படுத்தப்படும் சாதனம் ஆகும். இதன் தொழில்நுட்பம் காலத்திற்கேற்ப பல வளர்ச்சிகளை கண்டுள்ளது. தராசுகளின் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து, அவற்றின் வகைகளையும் பயன்பாடுகளையும் காணலாம். 

1 சமநிலை தராசு (Balance Weighing Scale)

செயல்முறை: இரண்டு பக்கங்களிலும் சமநிலை கோடுகளை கொண்டு பொருளின் எடையை அளவிடும் ஒப்பீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டது. உதாரணம்: பாரம்பரிய சமநிலை தராசுகள்.

2 இயந்திர தராசு (Mechanical Weighing Scale)

செயல்முறை: எடை கணக்கிட வேண்டிய பொருளை இந்த தராசில் வைத்தவுடன், அதில் பொருத்தப்பட்டிருக்கும் சுழலும் முள், நகன்று பொருளின் எடையைக் காட்டுகிறது.

உபயோகங்கள்: வணிகம், கடைகள், மருத்துவமனைகள்.

3 டிஜிட்டல் தராசு (Digital Weighing Scale)

செயல்முறை: டிஜிட்டல் தராசு என்பது மின்னணு முறையில் இயக்கப்படும் ஒரு சாதனமாகும். உயர் துல்லியத்துடன் எடை அளவை வெளிப்படுத்தும். LCD/LED டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு இணைப்பு போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டது.

4 பகுப்பாய்வு தராசு (Analytical Balance)

செயல்முறை: பகுப்பாய்வு தராசு மிகவும் துல்லியமானவை. மிகச் சிறிய அளவிலான பொருட்களை அளவிடப் பயன்படுகிறது. இது, நகைக்கடை மாற்றும் ஆய்வகங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

தொழில் நுட்ப மேம்பாடுகள்:

இணைய இணைப்பு: தராசுகள், இணைய இணைப்பு மூலம் பொருள்களின் எடையை பதிவேற்றவும் பகிரவும் முடியும்.

தானியங்கி தொகுப்பு: தொழிற்சாலைகளில் தராசுகள் முழுமையான தானியங்கியாக செயல்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
AI தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவதன் சாதக பாதகங்கள் என்னென்ன தெரியுமா? 
Types of weighing scale

தராசின் பயன்பாடுகள்:

தராசுகள் (weighing scales) பல்வேறு துறைகளிலும் பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில முக்கியமான பயன்பாடுகள்: 

வர்த்தக துறையில்: கடைகளில் (காய்கறி, பழம், மளிகை கடைகள்) பொருள்களின் எடைகளை கணக்கிட பயன்படுத்தப்படுகிறது. தங்கம், வெள்ளி போன்ற நகை கடைகளில் மிகச் சிறிய எடைகளை அளவிடும் தனிப்பட்ட தராசுகள் பயன்படுத்தப்படுன்றன.

விற்பனை சந்தைகளில்: மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் பொருளின் அளவுகளை சரியாக அளவிட பயன்படுத்துகின்றனர்.

தொழிற்சாலைகளில்: உற்பத்தி பொருட்களின் எடைகளை அளவிட மற்றும் தரத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பேக்கேஜிங் துறையில் சரியான எடை நிர்ணயம் செய்வதற்கும் பயன்படுகிறது.

அரசு துறைகளில்: நியாயவிலைக் கடை துறைமுகங்களில் கப்பல்களில் இருந்து இறக்கும் சரக்குகளின் எடையை கணக்கிடவும், சுங்கத் துறைகளில் சரக்குகளை சரிபார்க்கவும் பயன்படும்

விஞ்ஞான ஆய்வகங்களில்: மிகச்சிறிய அளவுகளை (மிக்ரோகிராம் அளவுகள் வரை) அளவிட பயன்படும் தராசுகள், பைகோலாஜி, இரசாயனவியல் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தரத்தை பரிசோதிக்க பயன்படுத்தப்படுகிறது

சிறப்பு பயன்பாடுகள்: மருத்துவ துறையில், நோயாளியின் உடல் எடையை கணக்கிட, விளையாட்டுத் துறையில் வீரர் மற்றும் வீராங்கனைகள் எடையை அளவிட, இராணுவத்தில் பீரங்கி போன்ற கருவிகளின் எடையை சரி பார்த்து நிர்வகிக்க வெவ்வேறு வகையிலான தராசுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இலவச அளவீடுகளில்: விவசாய துறையில் பயிர்களின் எடையை கணக்கிடவும் மண் பரிசோதனையிலும் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com