வந்துவிட்டது Digilocker: இனி உங்கள் ஆவணங்கள் எப்போதும் உங்கள் கையில்!

வந்துவிட்டது Digilocker: இனி உங்கள் ஆவணங்கள் எப்போதும் உங்கள் கையில்!

த்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகமாகி உள்ளது. டிஜிலாக்கர் என்ற திட்டம். இதன் மூலம் நம்முடைய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் எளிமையாகப் பெறமுடியும். 

வெளியே செல்லும் நம்மில் பெரும்பாலானவர்கள் லைசன்ஸ் கொண்டு செல்ல மறந்து விடுகிறோம். இதனால் பல சமயங்களில் ட்ராபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டு மொய் எழுதி இருப்பீர்கள். அல்லது ஏதாவது அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது ஆதார் அட்டையை கொண்டு செல்ல மறந்துவிடுவோம். இதனால் பல சமயங்களில் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்போம். இனி இதுபோல் டென்ஷனை ஏற்படுத்தும் பிரச்னையே உங்களுக்கு இல்லை. 

இதோ உங்களுக்காக வந்துவிட்டது டிஜிலாக்கர். 

2023 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் நிர்மலா சீதாராமன் அவர்கள், டிஜிலாக்கரின் பயன்பாடு குறித்து பேசியிருந்தார். 

"இனி வரும் காலங்களில் 'ஆதார்' மற்றும் 'பான்கார்டு' முக்கிய ஆவணங்களாக இருக்கும். இனி இந்த ஆவணங்களை நேரடியாகக் கையில் வைத்திருக்கத் தேவையில்லை. மேலும், இதுபோன்ற ஆவணங்கள் தொலைந்தாலும் கவலைப்பட வேண்டாம். டிஜிலாக்கர் என்ற செயலி மூலம் உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் ஸ்மார்ட்போனிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறியிருந்தார். 

டிஜிலாக்கரை ஸ்மார்ட் போனில் எப்படி பயன்படுத்துவது?

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று டிஜிலாக்கர் என்ற செயலியை இன்ஸ்டால் செய்யவும்.

பின்னர் உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்ட செல்போன் எண்ணை உள்ளீடு செய்து, புதிய பாஸ்வேர்டு ஒன்றைப் போட்டு, உங்களுக்கான கணக்கை உருவாக்க வேண்டும். 

அடுத்ததாக செயலியின் உள்ளே நுழைந்ததும், உங்கள் ஆதார் எண்ணை என்ட்ரி செய்தால், ஆதாரோடு இணைக்கப்பட்ட எண்ணுக்கு OTP அனுப்பப்படும். 

அந்த OTP எண்ணை நீங்கள் உள்ளீடு செய்த பிறகு, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட அனைத்து விதமான ஆவணங்களும் டிஜிட்டல் வடிவில் உங்களுக்குக் கிடைத்துவிடும். 

அதாருடன் இணைக்கப்படாத ஆவணங்களை நீங்களே நேரடியாக புகைப்படம் எடுத்தும் பதிவேற்றலாம். இதே மாதிரி உங்கள் பாஸ்போர்ட், மார்க்சீட், வாகன உரிமம், டிரைவிங் லைசன்ஸ் போன்ற அனைத்து சான்றிதழ் களையும் இந்த ஒரே செயலியில் நீங்கள் சேமிக்க முடியும். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் www.digilocker.gov.in இணையதளம் வாயிலாகவும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இனி வெளியே செல்லும்போது, அது இது என்று ஏகப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டுமென்ற டென்ஷன் நமக்கில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com