டிஜிட்டல் கற்றல் நாள் - பிப்ரவரி 23

டிஜிட்டல் கற்றல் நாள் - பிப்ரவரி 23
Published on

ண்டுதோறும் பிப்ரவரி கடைசி  வியாழனன்று டிஜிட்டல் கற்றல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் பிப்ரவரி 23ஆம் தேதி இந்நாள் கொண்டாடப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமையான வழிகளை  கற்றலிலும் கற்பித்தலிலும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த டிஜிட்டல் கற்றல் நாள் கொண்டாடப்படுகிறது. ஆன்லைன் வீடியோக்கள், வர்ச்சுவல் கருவிகள், கேட்ஜெட்ஸ் போன்ற தரமான  டிஜிட்டல் கருவிகள் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் எந்தப் பின்புலத்திலிருந்து வந்தாலும் அவர்களுக்கு நல்ல தரமான கல்வியை வழங்க முடியும்.

கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் டிஜிட்டலின் பங்கு மிகவும் அவசியமான ஒன்றாக விளங்கியது. தனியார் பள்ளிக், கல்லூரி மாணவர்கள் அலைபேசி மூலம் கல்வி கற்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டி.வி. மற்றும் ரேடியோ மூலம் ஆன்லைன் கல்வி கற்பிக்கப்பட்டது. மத்திய அரசு ஈ வித்யா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தீக்ஷா ஆன்லைன், ஸ்வயம் ஆன்லைன், ஸ்வயம் பிரபா,  தேசிய டிஜிட்டல் நூலகம், மெய் நிகர் ஆய்வுக்கூடம் போன்றவை தொடங்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது.

டிஜிட்டல் கற்றல் முறை பள்ளி, கல்லூரி மாணவர்கள், முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இருந்த இடத்திலிருந்தே விரல் நுனிகளில் தமக்குத் தேவையான தகவல்களை எளிதில் பெறமுடியும்.  அதிலும் ChatGPT வசதி வந்துவிட்ட இந்த நாளில் கற்றலும், கற்பித்தலும் மிகவும் எளிமையாகும் என்பது கண்கூடு.

அன்பு வாசகர்களே!

நொடிக்கு நொடி வளர்ந்து விரியும் டிஜிட்டல் உலகைக் கண்டு அஞ்சாமல், அதைக் கற்றலின் அவசியத்தை உணர்ந்து, அவ்வுலகில் பயணித்து, பயனடைவோம்!

www.kalkionline.com இணையதளத்திலிருந்து வாழ்த்துகள்! இணைந்திருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com