உங்கள் ஸ்மார்ட் டிவி சூப்பர் ஃபாஸ்டாக இயங்க இதை செய்யுங்கள்! 

Smart TV
Smart TV
Published on

இன்று ஸ்மார்ட் டிவியின் பயன்பாடு அனைவரது வீடுகளுக்கும் வரத் தொடங்கிவிட்டது. குறைந்த விலையிலேயே ஸ்மார்ட் டிவிகள் நமக்குக் கிடைப்பதால் இது மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. தற்போது மக்கள் டிவி வாங்க வேண்டுமென்றாலே ஸ்மார்ட் டிவியைதான் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் இதில் இன்டர்நெட் இணைத்து ஸ்மார்ட்போன் போல பயன்படுத்தலாம். 

ஆனால் பல சமயங்களில் ஸ்மார்ட் டிவியில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்னவென்றால், காலம் செல்லச் செல்ல அவற்றின் வேகம் குறைந்து விடுவதுதான். உங்கள் ஸ்மார்ட் டிவியும் வேகம் குறைவாக இயங்கினால் அதை ஒரு நொடியில் எப்படி ஃபாஸ்டாக மாற்றலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

பொதுவாகவே ஸ்மார்ட் டிவியில் ஸ்மார்ட்போன்கள் போன்று அதிகப்படியான அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு பயனற்றது போல் உணரும் அனைத்தையும் டிசேபிள் செய்யுங்கள். இவைதான் உங்கள் டிவியின் பர்ஃபார்மன்ஸ் குறைக்கிறது. 

அடுத்ததாக அவ்வப்போது உங்கள் டிவியின் சாப்ட்வேரை அப்டேட் செய்து கொள்ளுங்கள். சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படாமல் இருப்பதும் உங்கள் டிவியின் பெர்பார்மன்ஸை குறைக்கலாம். இதனால் டிவியில் உள்ள சாப்ட்வேர் பிரச்சினைகள் நீக்கப்பட்டு, வேகமாக மாற்றும். உங்கள் டிவியின் சாப்ட்வேர் அப்டேட்டை பார்க்க, அதன் செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் புதிய அப்டேட் வந்திருந்தால் உடனடியாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும். 

அடுத்ததாக நீங்கள் உங்கள் ஸ்மார்ட் டிவியை வைஃபை மூலம் இணையத்துடன் இணைத்திருந்தால். அதை வயர்டு கனெக்சனுக்கு மாற்றுங்கள். ஏனென்றால் வயர்லெஸ் கனெக்சன் வேகத்தை விட வயர்டு கனெக்சன் வேகம் அதிகமாக இருக்கும். இதனாலும் உங்களுடைய டிவி பெர்பார்மன்ஸ் அதிகரிக்கும். 

இத்தகைய விஷயங்களை உங்கள் ஸ்மார்ட் டிவியில் நீங்கள் முறையாக கையாண்டாலே, முன்பை விட வேகம் கூடுதலாக இருக்கும். இதை அவ்வப்போது சரிபார்த்து மேம்படுத்துவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com