உங்கள் மொபைல் பேட்டரி வேகமாக தீர்ந்து விடாமல் இருக்க இதை செய்யுங்கள்!

Prevent mobile battery draining faster
Prevent mobile battery draining faster

என்னத்தான் புது மாடலில் அதிக விலைக்கு மொபைல் வாங்கினாலும் கொஞ்ச நாட்களிலேயே அதனுடையே வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறது. காலை வேலைக்கு சென்று இரவு வந்தவுடன் போனைப் பார்த்தால் பேட்டரி சுத்தமாக இருக்காது. வேலை செய்யும்போது சிலர் பவர் ஏற்றினாலும், சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. பேட்டரி கம்மியாகும்போது பவர் பேங்க் பயன்படுத்துபவர்களும் உண்டு. குறிப்பாக எதாவது மலைப் பகுதியில் ட்ரெக்கிங் செய்யும்போதும் கோவிலுக்கு செல்லும்போதும் பவர் பேங்கும் தீர்ந்துவிடுகிறது என்றால் என்ன செய்வது. அந்த சமயங்களில் மொபைல் மிகவும் அத்தியாவசமானதும் கூட. ஆகையால் வீட்டை விட்டு வெளியே வந்தாலே பேட்டரி குறையாமல் இருக்க சில வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். அதேபோல் உங்கள் போன் அதிகமாகப் பயன்படுத்தினால் மட்டும் தான் பேட்டரி குறைகிறதா அல்லது போனில் பேட்டரி பிரச்சனை இருக்கிறதா என்பதை சரிப் பார்க்கவும்.

பேட்டரியை சரி பார்க்கும் வழி:

  • Setting ஆப்பில் சென்று Battery Usage அல்லது Batter Status என்றிருக்கும் ஆப்ஷன் சென்று எத்தனை சதவீதம் பேட்டரி சரியாக உள்ளது என்று சரிப்பார்த்துக் கொள்ளலாம். மேலும் எந்த ஆப் அதிக பேட்டரி இழுக்கிறது என்ற தகவல்களும் இருக்கும். அதையும் கவனத்துடன் பார்க்க வேண்டும்.

  • *#*#4636#*# என்ற எண்ணிற்கு டயல் செய்தால் பேட்டரி பற்றிய அனைத்து தகவல்களும் வந்துவிடும். அதை வைத்து உங்கள் போனில் பேட்டரி பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை சரிப் பார்த்துக் கொள்ளலாம்.

பேட்டரியின் சார்ஜ் வேகமாக குறைவதை தடுக்க சில வழிகள்:

  • உங்கள் போனில் நிறைய ஆப்களின் நோட்டிஃபிகேஷன் ஏராளமாக வந்துக்கொண்டே இருக்கும். அதுவும் இந்த உணவு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் ஆப் நோட்டிஃபிகேஷனை விட்டுக்கொண்டே இருப்பார்கள். அதுதான் உங்கள் மொபைல் போனில் பேட்டரி குறைய முதல் காரணமாக இருக்கிறது. ஆகையால் போன் Setting சென்று நோட்டிஃபிகேஷன் அனைத்தையும் நிறுத்திவிடுங்கள்.

  • உங்களுக்கு Location ஆப் தேவைப்படாத போது நிறுத்தி வையுங்கள். இதுவும் மறைமுகமாக உங்கள் போனில் வேலை செய்துக் கொண்டே இருக்கும். ஆகையால் பேட்டரியை குறைத்துவிடும்.

  • இன்ஸ்டிராகிராம் , ஃபேஸ்புக் போன்றவைப் பார்த்து விட்டு recent task சென்று Close all கொடுத்துவிடுங்கள். ஏனெனில் வலைத்தளங்கள் பயன்படுத்திவிட்டு வந்தப் பிறகும் அதன் அப்டேட்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அதை நீங்கள் ஆப்பின் உள்சென்று பார்க்கவில்லை அவ்வளவுதான். ஆகையால் Close all கொடுத்துவிடுவது நல்லது.

  • மொபைலில் வெளிச்சத்தை குறைத்துக்கொள்ளுங்கள். அதிக வெளிச்சம் அதிகப் பேட்டரியை இழுக்கும்.

  • தூங்கவதற்கு முன் Setting சென்று Time out கொடுங்கள். இது போன் பயன்படுத்தாதபோது பேட்டரி எடுத்துக்கொள்வதை நிறுத்தும்.

  • அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் மொபைல் வைப்பதை நிறுத்துங்கள்.

  • போனில் பேட்டரி மிக மிக குறைவாகும்போது Batter saver பயன்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com