நாசாவின் Air Taxi பற்றி தெரியுமா?

NASA's Air Taxi
NASA's Air Taxi

உலகிலேயே முதன்முறையாக ஜாபி ஏர் ஏவியேஷன் என்ற நிறுவனம் 'Air Taxi' விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த Air Taxi வாகனத்தை நாசா சோதனை செய்து பார்க்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முக்கியமாக மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனமாகும். 

முற்றிலும் புதுமையான இந்த Air Taxi விமானம், இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே செங்குத்தாக புறப்பட்டு மற்றும் தரையிறங்கும் அம்சத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு விமானமாக இருந்தாலும் டாக்சியாக இதைப் பயன்படுத்தினால் செங்குத்தாக தரையிறங்க வேண்டும் என்பதால் உருவாக்கியுள்ளனர். மேலும் இத்தகைய விமானம் முற்றிலும் புதியது என்பதால் இதை பல கட்டங்களில் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும். 

நாட்டின் விமானப் போக்குவரத்து அமைப்புகளுக்கு இது பொருந்துமா என்பதை பார்ப்பதற்காக இதன் எல்லா அம்சங்களையும் நாசா சோதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விமானத்தை கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஜாபி ஏரோஸ்பேஸ் நிறுவனம்தான் உருவாக்கியுள்ளது. இந்த விமானத்தை கடந்த திங்களன்று யுனைடெட் ஸ்டேட் விமானப்படையிடம் ஒப்படைத்தது இந்நிறுவனம்.  

அடுத்த கட்டமாக நாசாவைச் சேர்ந்த விமானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இந்த விமானத்தை சோதனை செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். அடுத்தபடியாக இந்த விமானத்திற்கான போக்குவரத்து மேலாண்மை, விமான நடைமுறைகள் மற்றும் தரையிறங்குவதற்கான உட்கட்டமைப்பு ஆகியவற்றில் 2024 ஆம் ஆண்டிலிருந்து கவனம் செலுத்தப்படும். மேலும் இந்த விமானத்தை சோதிக்கும்போது எதிர்காலத்தில் இது மற்ற விமானப் போக்குவரத்து அமைப்புகளுடன் ஒன்றுமா என்பதும் சோதிக்கப்படும். 

எதிர்காலத்தில் விமான டாக்ஸி மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவே, நாசா இத்தகைய தொழில்நுட்பங்களில் அதிகம் ஈடுபட்டு விரைவாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com