கம்ப்யூட்டர், லேப்டாப்புகளில் நைட் மோட் (மஞ்சள் விளக்கு) பற்றி தெரியுமா?

லேப்டாப்..
லேப்டாப்..
Published on

ன்றைய டிஜிட்டல் உலகில் அனைவரது கைகளிலும் தவழ்ந்துக்கொண்டிருக்கிறது செல்போன், மடிக்கணினி, நோட் பேட், டேப்லெட் மற்றும் இன்ன பிற சாதனங்கள். இவற்றைப் பயன்படுத்தும் கால அளவும் அதிகரித்துக் கொண்டே  போகிறது. இத்தகையச் சாதனங்களைப் பயன்படுத்தும்போது அவற்றை  இரவு விளக்கு மோடில் (Night Mode) போட்டு பயன்படுத்துவது நமது கண்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கும். 

கேட்ஜெட்டுகளில் இருக்கும் நீல விளக்கு நமது கண்களுக்கு உண்டாக்கும் பாதிப்புகள். 

நீல விளக்கு என்றால் என்ன? நாம் பயன்படுத்தும் லேப்டாப் கம்ப்யூட்டர், செல்போன்கள் மற்றும் செயற்கை விளக்குகளில் இருந்து நீல நிற வெளிச்சம் வெளியேறுகிறது. சூரியனில் இருந்தும்கூட நீல நிற வெளிச்சம் வெளியேறுகிறது. ஆனால், அது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், கேட்ஜெட்டுகள் உமிழும் நீல நிற வெளிச்சம் நம் கண்களுக்கு நல்லது அல்ல. ஏனென்றால் அவை நமது தூக்கத்தைப் பாதிக்கின்றன. தூக்கத்தை உற்பத்தி செய்யக்கூடிய மெலடோனின் என்கிற ஹார்மோனைப் பாதித்து தூக்கம் வராமல் தடுக்கின்றன. மேலும், இந்த நீல ஒளி பலவிதமான அசௌகரியங்களை கண்களுக்கு ஏற்படுத்துகிறது. கண்களின் பார்வைத் திறனையும் பாதிக்கிறது.

இதுபோன்ற சாதனங்களில் இரவு விளக்கு மோடைப் பயன்படுத்துவது நல்லது. நீல ஒளிக்குப் பதிலாக இவை மஞ்சள் நிற ஒளியை வெளியிடுகின்றன. இவை கண்களுக்கு அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.

1. இந்த மஞ்சள் நிற ஒளி கண்களை சோர்வடைவதில் இருந்து காக்கிறது.

2. நமது ஸ்கிரீன் ஒரு இதமான சூழலை உருவாக்குகிறது. அது கண்களையும் காக்கிறது.

3. இந்த மஞ்சள் நிற விளக்கு வெளிச்சம் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து விரைவிலேயே தூக்கம் வரச் செய்துவிடும். 

4. மஞ்சள் நிற ஒளியில் வாசிக்கும்போது கண்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. அது சந்தோஷமான மன நிறைவைத் தருகிறது. நல்ல வாசிப்பு அனுபவம் தருகிறது.

5. சிலருக்கு நீல நிற ஒளி மைக்ரேன் தலைவலியை உண்டாக்கி மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அவர்களுக்கு மஞ்சள் நிற ஒளி இந்தத் தலைவலி பிரச்னைகளில் இருந்து  நிவாரணம் தருகிறது. 

6. இந்த மஞ்சள் நிற ஒளி அல்லது நைட் மோடை பகல் நேரத்திலும் பயன்படுத்தலாம்.

லேப்டாப்...
லேப்டாப்...

மேலும் கவனிக்க...

* கணினி மற்றும் செல்போன்களை குறிப்பிட்ட அளவு பிரைட்னஸ் வைத்து பார்ப்பது நல்லது.

* அதே நேரம் கண்களில் இருந்து சற்று  குறிப்பிட்ட இடைவெளியில்  வைத்து இவற்றை பார்ப்பது கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.

* கண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு 20 – 20- 20 விதியை பயன்படுத்துவது அவசியம். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறையும் 20  நொடிகளுக்கு 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். இது கண்களை அழுத்தத்திலிருந்து காக்கிறது.

* நிறைய பேர் இரவு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் படுத்துக்கொண்டு போர்வைக்குள் செல்போனை வைத்துப் பார்க்கிறார்கள். இது கண்களை மிகவும் பாதிக்கும். பார்வைத் திறன் குறைபாட்டை அதிகப்படுத்தும். 

பகல் நேரமோ இரவு நேரமோ செல்போன், கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்க்காமல் அவ்வப்போது ஓய்வு கொடுத்து 20 – 20- 20  விதியை பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காலையில் கடைப்பிடிக்க வேண்டிய 20/20/20 Concept!
லேப்டாப்..

அவற்றை நம் கண்களுக்கு மிக அருகில் வைத்து பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வைத்து மடிக்கணினி அல்லது கம்ப்யூட்டரை பயன்படுத்துவது நல்லது. இரவில் பயன்படுத்தும்போது அறையின் வெளிச்சமும் மிகவும் முக்கியம். அதிக அளவு விளக்கின் வெளிச்சம் கண்களை கூசச் செய்யும். அளவான வெளிச்சம் போதுமானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com