நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன தெரியுமா? 

stars
Do you know how stars are formed?
Published on

இரவு நேரத்தில் வானத்தைப் பார்க்கும்போது நமக்குத் தெரியும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு தனிக்கதையை சொல்லும். அத்தகைய நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன? எவ்வளவு காலம் வாழ்கின்றன? எப்படி அழிந்து போகின்றன? என்பதை அறிவது பிரபஞ்சத்தைப் பற்றிய நம் புரிதலை மேலும் அதிகரிக்கும். இந்தப பதிவில் நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

நட்சத்திரங்கள் பெரும்பாலும் ‘நெபுலாக்கள்’ எனப்படும் பிரமாண்டமான வாயு மற்றும் தூசி மேகங்களிலிருந்து உருவாகின்றன. இந்த நெபுலாக்கள் முந்தைய நட்சத்திரத்தில் அழிவின் மிச்சங்களால் உருவாகின்றன. ஒரு நட்சத்திரம் தனது எரிபொருளை முழுமையாக எரித்துவிட்டால், அது வெடித்து சிதறி அடர்த்தியான வாயு மற்றும் தூசி மேகங்களை உருவாக்கும். இந்த வாயு மற்றும் தூசி மேகங்களில் உள்ள துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கத் தொடங்குகின்றன. 

ஈர்ப்பு விசை காரணமாக இந்த துகள்கள் மெதுவாக ஒன்று கூடி, பெரிய குழுக்களை உருவாக்குகின்றன. இந்த குழுக்கள் மேலும் மேலும் பெரிதாகி ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்ததும், ஈர்ப்பு விசை அவற்றின் மையப் பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. 

இந்த அழுத்தம் அதிகமாகும்போது மேகத்தின் மையப் பகுதியில் உள்ள வாயு வெப்பமடைந்து, அணுக்கரு இணைவு (Nuclear Fusion) எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. இந்த செயல்முறையில் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குகின்றன. இந்த செயல்முறையின்போது மிகப்பெரிய அளவில் ஆற்றல் வெளியாகிறது. அந்த ஆற்றலே நட்சத்திரம் ஒளிவதற்கு காரணமாக அமைகிறது. 

நட்சத்திரங்கள் அவற்றின் நிறை, அளவு மற்றும் ஒளிர்வு ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. சூரியன் ஒரு மஞ்சள் நிற குள்ள நட்சத்திரம். இது பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் பொதுவான வகை நட்சத்திரங்களில் ஒன்று. அதைத் தவிர நீல நிறப் பெரிய நட்சத்திரங்கள், சிவப்பு நிற குள்ள நட்சத்திரங்கள் போன்ற பல வகையான நட்சத்திரங்கள் உள்ளன. 

இதையும் படியுங்கள்:
பில்கேட்சிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய 5 வாழ்க்கை பாடங்கள்!
stars

ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை சுழற்சி அதன் நிறையைப் பொறுத்து மாறுபடும். பெரிய நட்சத்திரங்கள் குறைந்த காலமே வாழ்கின்றன. அவை தங்கள் எரிபொருளை வேகமாக எரித்துவிட்டு, ‘சூப்பர்நோவா’ எனப்படும் பெரிய வெடிப்பில் மடித்து போகின்றன. இதற்கு அப்படியே நேர் எதிராக சிறிய நட்சத்திரங்கள் அவற்றின் எரிபொருளை மெதுவாக எரித்து, நீண்ட காலம் வாழ்கின்றன. பின்னர் குள்ள நட்சத்திரமாக மாறி இறுதியில் கருந்துளையாக அவை மாறும் வாய்ப்புள்ளது. 

இப்படித்தான் ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை, பெருவெடிப்பில் தொடங்கி பெருவெடிப்பில் முடிகின்றது. இது ஒரு சங்கிலித் தொடர் போல அப்படியே நடந்து கொண்டிருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com