
நவீன காலத்தில் இண்டர்நெட் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2ஜி காலம் போய் தற்போது 5ஜி, ஏர் ஃபைபர் என்ற நிலைக்கு டெக்னாலஜி வேகமாக வளர்ந்து விட்டது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் செண்டர்களில் மட்டும் தான் இண்டர்னெட் வசதி இருக்கும். இதற்கு காதலர் தினம் படமே சான்று. காதலர்களிடம் பேசுவதற்காகவே ப்ரவுசிங் செண்டர் போவது போன்று காட்சிகள் அமைந்திருக்கும். அன்றைய காலங்களில் தினசரி போனுக்கே ரூ.10 முதல் ரூ.50 வரை தான் மக்கள் ரீசார்ஜ் செய்வார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் இண்டர்நெட் மூலம் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிறது.
வீடுகள், செல்போன் என அனைத்திலும் இண்டர்நெட் வந்துவிட்டது. ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் இருந்து கூட இந்த இண்டர்நெட்டை நாம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது.
இன்றைய காலங்களில் WIFI தெரியாதவர்கள் யாருமே இல்லை. சிறு குழந்தைகளே யூடியூப் பார்க்க வேண்டும் WIFI ஆன் செய்யுங்கள் என்று கூறுகிறது. இந்த அளவிற்கு WIFI என்ற வார்த்தை பரவி வரவே, இதன் விரிவாக்கம் யாருக்காவது தெரியுமா என்றால் அது பலருக்கும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
சமீப காலமாகவே இணையத்தில் பல ஆங்கில பெயர்களின் விரிவாக்கம் குறித்த வினாக்கள் வைரலாகி வருகிறது. இதற்கு பலருக்கும் பதில் தெரியவில்லை என்றால் பதில் என்னவாக இருக்கும் என ஆர்வம் கொள்கிறார்கள். அப்படி ஒரு கேள்வி தான் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அது தான் WIFI விரிவாக்கம் என்ன? இதற்கான பதிலை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
WI-FI என்பதன் முழு விரிவாக்கம் Wireless Fidelity ஆகும். இது சாதனங்கள் இணையத்தை அணுகவும் நெட்வொர்க்கில் உள்ள பிற சாதனங்களுடன் இணைக்கவும் அனுமதிக்கும் வயர்லெஸ் தொழில்நுட்பமாகும்.
WIFI-ன் வரலாறு என்ன தெரியுமா?
கீக்ஸ் ஃபார் கீக்ஸின் கூற்றுபடி 1999ஆம் ஆண்டில் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனம் முதன்முறையாக WIFI-l 802.112b-ஐ அறிமுகப்படுத்தியது. இது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் WIFI மாதிரியாகும். வெறும் பைட்ஸ் (bytes) ஆக இருந்தது தான் தற்போது Mb, Gb அளவிற்கு உயர்ந்து வளர்ந்துள்ளது. வெறும் 802 பைட்ஸ் இருந்த இண்டர்நெட் வேகம் தற்போது 5ஜிபி வரை உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
தற்போது ஏஐ காலத்தை நோக்கி நகரும் நிலையில், இன்னும் இண்டர்நெட் வேகம் வளர்ந்து வரும் என சொல்லப்படுகிறது.