மார்க் ஜுக்கர்பர்க் Vs எலான் மஸ்க் சண்டை எதில் நேரடி ஒளிபரப்பு தெரியுமா? 

Mark Zuckerberg Vs Elon Musk
Mark Zuckerberg Vs Elon Musk

மார்க் ஜுக்கர்பர்க் மற்றும் எலான் மஸ்க் இடையேயான கூண்டுச் சண்டை எதில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவலை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். 

டெஸ்லா சிஇஓ எலான் மாஸ்க் மற்றும் மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூண்டு சண்டை, இத்தாலியில் ரோம் கொலோசியத்தில் நடைபெறும் என ட்விட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏற்கனவே கூறியிருந்தார். அதன் பிறகு மற்றொரு ட்வீட்டில் 'லைப் ஆஃப் ப்ரையன் கொலோசியம் சண்டை' என்ற தலைப்பில் 1 நிமிடம் 30 வினாடி கொண்ட யூடியூப் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். மேலும் 'எனது சகிப்புத்தன்மையில் நான் வேலை செய்ய வேண்டும்' என்றும் அதில் எழுதி இருந்தார். இதற்கு முன்னதாக இந்த சண்டை லாஸ்ட் வேகாசில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இத்தாலியில் நடக்கும் செய்தி வெளிவந்ததும், மக்களின் ஆர்வம் அவர்களின் சண்டை மீது அதிகரித்தது. 

இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையேயான குண்டுச் சண்டை பற்றி எலான் மஸ்க் தன்னுடைய சமூக ஊடகமான X மூலம் தெரிவித்துள்ளார். அதாவது இருவருக்கும் இடையேயான சண்டையை X தளம் நேரடி ஒளிபரப்பு செய்யும் என சமீபத்திய ட்வீட் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சண்டையின் மூலம் கிடைக்கும் பணத்தை, மூத்த குடிமக்களுக்கான தொண்டு நிதிக்காக வழங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இந்தப் போட்டி குறித்த முழுமையான தகவல்கள் தெளிவாக வெளியிடப் படவில்லை. இருப்பினும் இந்த சண்டை குறித்து தான் தயாராகி வருவதாக எலான் மஸ்க் சுட்டிக் காட்டியிருந்தார். 

ஜுக்கர்பெர்க் 5 அடி 7 அங்குலம் உயரமும், சுமார் 65 கிலோ எடையும் கொண்டவர். எலான் மஸ்க் 6 அடி 2 அங்குலம் உயரமும், தோராயமாக 104 கிலோ எடையும் கொண்டவர். இருப்பினும், இந்த இரண்டு தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளும் தங்களின் உயரம் மற்றும் எடை வேறுபாடுகளால் கவலைப்படுவது போல் தெரியவில்லை. எலான் மஸ்க் தன்னுடைய உடலமைப்பைப் பயன்படுத்தி ஜுக்கர்பெர்கை வெல்ல முடியும் என உறுதியாக இருக்கிறார். 

அதேபோல மார்க் ஜுக்கர்பர்க்  ஏற்கனவே தற்காப்புக் கலையில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்களது சண்டையில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com