இதை செய்தால் மொபைல் டேட்டா அவ்வளவு எளிதில் காலியாகாது! 

Mobile data
Mobile data
Published on

இணையம் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். போனில் டேட்டா தீர்ந்துவிட்டாலே கை எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. நம்முடைய ஸ்மார்ட்போனில் டேட்டா இல்லை என்றால், இந்த சாதனத்தால் இனி என்ன பயன் என்ற அளவுக்குத் தோன்றும். பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் போன்ற எதுவுமே வேலை செய்யாது. 

தற்போது பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 ஜிபி திட்டத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் போனை சிறிது நேரம் பயன்படுத்தத் தொடங்கியதுமே உங்கள் டேட்டா தீர்ந்துவிட்டது என்று மெசேஜ் வந்துவிடுகிறது. இந்தப் பதிவில், ஒரு நாள் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினாலும் டேட்டா வேகமாக தீராமல் இருப்பதற்கு சில வழிமுறைகளை சொல்லப் போகிறேன். 

சாதனத்தை முறையாக அப்டேட் செய்யுங்கள்: ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கு அதை முறையாக அப்டேட் செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை. ஸ்மார்ட்போன் வாங்கியபோது என்ன சாப்ட்வேர் இருக்கிறதோ அதை அப்படியே நீண்ட காலம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் நிறுவனங்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் சாப்ட்வேர் அப்டேட்டை வெளியிடுவார்கள். அதில், அந்த சாதனத்தில் முந்தைய பதிப்பு சாப்ட்வேரில் இருந்த பல பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படும். இதை நீங்கள் சரியாக அப்டேட் செய்யாதபோது அது டேட்டாவை அதிகம் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இந்த சிக்கலைத் தீர்க்க, உங்கள் சாதனத்தில் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை எனேபிள் செய்துவிடுங்கள். இதனால் ஒவ்வொரு முறை உங்கள் சாதனத்திற்கு புதிய அப்டேட் வரும்போதும் தானாகவே அப்டேட் ஆகிவிடும். 

தற்போது வரும் எல்லா சாதனங்களிலும் டேட்டா சேவர் அம்சம் உள்ளது. ஆனால் இதை யாரும் பயன்படுத்துவதில்லை. இந்த அம்சத்தால் உங்களுடைய டேட்டா வெகுவாக சேமிக்கப்படுகிறது. இந்த அம்சத்தை பயன்படுத்துவதால் உங்கள் சாதனத்தில் பேக்ரவுண்டில் இயங்கும் ஆப்ஸ்களின் டேட்டா உபயோகத்தைத் தடுக்கிறது. இதனால் அதிகப்படியான டேட்டா சேமிக்கப்படுகிறது. 

அடுத்ததாக உங்களின் டேட்டா உபயோகத்தை நிர்வகிக்க டேட்டா வரம்பைப் பயன்படுத்தலாம். அதாவது ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு டேட்டா பயன்படுத்த வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு டேட்டா பயன்படுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே உங்களால் நிர்ணயம் செய்ய முடியும். டேட்டா யூஸேஜ் அம்சத்தை நீங்கள் எனேபிள் செய்தால், ஒவ்வொரு முறை அந்த வரம்பை மீறியதும் உங்களுக்கு நினைவுபடுத்தும். அப்போது நீங்கள் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு ஒரு நாளில் டேட்டாவை முறையாகப் பங்கிட்டு பயன்படுத்தலாம். 

அடுத்ததாக உங்கள் சாதனத்தில் இருக்கும் ஆப்ஸ்கள் தானாகவே தன்னை அப்டேட் செய்வதை நிறுத்தலாம். இப்படி செய்வது மூலமாகவும் அதிகப்படியான டேட்டாவை உங்களால் சேமிக்க முடியும். இதன் மூலம் முற்றிலும் தேவையில்லாத செயலிகள் அவ்வப்போது டேட்டாவை பயன்படுத்தி, தானாகவே அப்டேட் ஆவதைத் தவிர்த்து, தரவுப் பயன்பாட்டை குறைக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com