இனி பேங்க் போக வேண்டாம்! இ-சேவை மையங்களே போதும்!

E-service centers
E-service centers
Published on

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி இணையம் வாயிலாகவே அரசு சார்ந்த சில பணிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதில் தற்போது புதிதாக, தமிழகத்தில் உள்ள எல்லா இ-சேவை மையங்களிலும் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த, தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டு வருகிறது. 

ஒரு காலத்தில் நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டுமென்றால் நாம் கட்டாயம் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. இது பொதுமக்களுக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்ததால் ஏடிஎம் மையங்கள் உருவாக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் வங்கிக்கு செல்லாமலேயே பணத்தை எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து டிஜிட்டல் பேமென்ட் முறைகள் தற்போது உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வீட்டில் இருந்து கொண்டே யாருடைய அக்கவுண்டுக்கு வேண்டுமானாலும் நம்மால் பணத்தை மாற்ற முடியும். இருப்பினும் வங்கிக்கு சென்று பணம் எடுப்பவர்களின் அளவு அதிகமாக இருப்பதால் வங்கிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

எனவே மக்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக இ-சேவை மையங்கள் DigiPay வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு, ஆதார் கார்டு மற்றும் பயோமெட்ரிக் பயன்படுத்தி ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் அரசு அலுவலக பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இந்த இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. 

இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் அரசு சான்றிதழ்கள், ஆதார் கார்டு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அரசு வசதிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் இனி இந்த மையங்களில் பேங்கில் பணம் எடுப்பது போல எடுத்துக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத்துறை செய்து வருகிறது. 

இதற்கு முன்னர் வங்கி ஏடிஎம்கள் தவிர பொதுத்துறை நிறுவனமான அஞ்சல் துறையிலும் ஏடிஎம் மற்றும் பணம் பெறும் கார்டு வசதிகள் இருக்கிறது. இதேபோல தற்போது இ-சேவை மையத்தையும் மேம்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த வசதியால் பொதுமக்கள் மேலும் பயனடைவார்கள் என நம்பப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com