ஹெட்போன் அதிகம் பயன்படுத்துபவர்கள் ஜாக்கிரதை!

Headphone
Headphone
Published on

நீங்கள் ஹெட்போன் அதிகம் பயன்படுத்தும் நபராக இருந்தால், தற்போது உங்களுடைய காதுகளில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் வளர்ந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

தற்போது நாம் வெளியே எங்கு சென்றாலும் கையில் ஸ்மார்ட் போனும், ஹெட்போனும் இல்லாமல் போவதில்லை. இதைப் பயன்படுத்தி பாடல்கள் கேட்பது, வீடியோக்கள், திரைப்படங்கள் பார்ப்பது என பல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறோம். பல நிறுவனங்களும் புதிதாக ஹெட்போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். மக்களும் ஸ்டைலாக அதை வாங்கி காதில் மாட்டிக்கொண்டு இசை மழையில் நனைகின்றனர். ஆனால் ஹெட் ஃபோனால் நமது காதுகளில் பாக்டீரியாக்கள் உருவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

அதிகபடியாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களின் காதுகளில் பாக்டீரியாக்கள் எளிதாக நுழையும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இதற்கான போதிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை. ஹெட்போனில் பணிந்திருக்கும் அதிகப்படியான தூசிகளும், அழுக்குகளும் நம் காதுகளில் தொற்றை ஏற்படுத்த வழி வகுக்கும். எனவே அதை அவ்வப்போது சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்லது. 

காதில் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்த்தொற்று ஒரு சங்கடமான விஷயம்தான். மேலும் ஹெட்போன் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களாலும் காதுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் மற்றும் தோல் பொருட்களால் செய்யப்பட்ட ஹெட்போனால், காதில் நோய்த்தொற்று அபாயம் அதிகரிக்கிறது. எனவே ஹெட் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவது சரியல்ல. அப்படியே பயன்படுத்தினாலும் குறைந்த ஒலியில் அதைப் பயன்படுத்த வேண்டும். 

ஹெட்போன்களை அதிகம் பயன்படுத்துவதால், காதில் போதிய காற்றோட்டமின்றி அதிகம் வெப்பமடைகிறது. இது பாக்டீரியாக்கள் வளர்வதற்கு வழி செய்கிறது. எனவே ஹெட்போன் அதிகம் பயன்படுத்துபவர்கள் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது நல்லது. 

உங்கள் காதுகளை நோய் தொற்றுகளிடமிருந்து பாதுகாக்க ஹெட்போனையும், உங்கள் காதுகளையும் அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com