பான் கார்ட் அதிகம் தேவைப்படும் ஆவணமாக மாறிவிட்டதால், இ-பான் கார்டை பெற்று பயன்படுத்திக்கொள்ள வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் பணப் பரிவர்த்தனைகளுக்கு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுவது பான் கார்ட். பான் கார்டு அனைத்து வங்கி பயன்பாட்டிற்கும் தேவைப்படும் முக்கிய ஆவணமாக உள்ளதோடு, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் வருங்காலங்களில் பான் கார்டு இன்றி எந்த வகையான வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்ற அளவிற்கு பான் கார்டின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பான் கார்டின் தேவை அதிகரித்துள்ளதால், அவசர பயன்பாட்டிற்காக ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்து கொண்டு இ- காப்பியை பயன்படுத்தி பயன்பெற வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் ஆதார் கார்டு வைத்துள்ளவர்கள் தாங்களாகவே ஆன்லைன் வழியாக இ -பான் கார்டை பெற்று பயன்படுத்த முடியும்.
இதற்காக முதலில் இந்திய வருமான வரித்துறையினுடைய அதிகாரபூர்வ இணையதள https://www.incometax.gov.in/iec/foportal/ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பிறகு இன்ஸ்டன்ட் இ பான் கார்டு என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு நியூ பான் கார்டு என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து 12 இலக்க ஆதார் நம்பரை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும். பிறகு கண்டினியூ கொடுத்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி எண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வேலிடிட்டி ஆதார் என்ற பட்டனை தேர்வு செய்து, கன்டினியூ கொடுக்க வேண்டும். பிறகு ஆதார் விவரங்களை சரிபார்த்து ஐ அக்சப்ட் என்ற பட்டனை கிளிக் செய்து இ- பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதிதாக விண்ணப்பிக்கவும் முடியும், முன்பே பெற்றவர்கள் இணைய பான் கார்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.