தீபாவளி சமயத்தில் விமான டிக்கெட் புக் செய்வதற்கு ஈஸியான வழி இதுதான்!
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பல மாதங்களுக்கு முன்பே பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யத் தொடங்குகின்றனர். இது தவிர அவற்றில் டிக்கெட் கிடைக்காதவர்கள் விமானத்திற்காகவும் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் இது மிகவும் பிஸியான காலம் என்பதால் அவ்வளவு எளிதில் டிக்கெட் கிடைப்பதில்லை. அப்படியே டிக்கெட் கிடைத்தாலும் அதன் விலை அதிகமாகவும், சாதாரண டிக்கெட் விலையை விட இரு மடங்கு மூன்று மடங்கு என அதிக தொகை கொண்டதாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் பலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பணிபுரியும் ஊரிலேயே இருந்து விடுவார்கள். குறிப்பாக வெளியூரில் வேலை செய்யும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இத்தகைய சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆனால் தீபாவளி சமயத்தில் டிக்கெட் புக் செய்வதற்கு ஒரு ட்ரிக் இருக்கிறது.
மிகவும் குறைந்த விலையில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை புக் செய்யக்கூடிய இணையதளங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இத்தகைய இணையதளங்கள் வழியாக குறைந்த விலையில் டிக்கெட் புக் செய்து சொந்த ஊருக்கு செல்லலாம். நீங்கள் இருக்கும் ஊரில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் உங்கள் அருகே இருக்கும் மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து டிக்கெட் எடுக்கலாம்.
அந்த இணையதளத்தின் பெயர் Skyscanner. முதலில் நீங்கள் இந்த இணையதளத்தில் உள்ளே நுழைந்ததும் நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள் என்ற இடத்தை தேர்வு செய்து மேலும் நீங்கள் எங்கிருந்து புறப்படப் போகிறீர்கள் என்று தகவலையும் உள்ளீடு செய்ய வேண்டும். இந்த இரண்டு தகவல்களையும் நீங்கள் கொடுத்த பின்பு, நீங்கள் புறப்படும் தேதி மற்றும் திரும்பும் தேதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக தனியாக போகிறீர்களா அல்லது உங்களுடன் வேறு யாராவது வருகிறார்களா என்ற தகவலை கொடுத்தவுடன் மலிவான விமான டிக்கெட் பட்டியல் உங்களுக்குக் காட்டப்படும். அதில் உங்களுக்கு எது சரியானதாக உள்ளதோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த, முறையாக நடத்தப்படும் இணையதளம். இதை பயன்படுத்தி நீங்கள் டிக்கெட் புக் செய்வது மூலமாக மற்ற இணையதளங்களில் கிடைப்பதை விட டிக்கெட் விலை குறைவாகவே இருக்கும்.
எனவே தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் உங்களுக்கு பிடித்த விமானத்தை தேர்வு செய்து, விலை குறைவாகவே முன்பதிவு செய்து விமான பயணத்தை அனுபவிக்கலாம். இந்த இணையதளம் குறித்து பெரும்பாலான நபர்களுக்குத் தெரிவதில்லை. எனவே இதை பயன்படுத்தி இனி நீங்கள் எளிதாக விமான டிக்கெட் புக் செய்ய முடியும். மேலும் இந்தத் தகவலை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.