
காலத்திற்கேற்ப மக்கள் மாறி கொண்டே தான் இருக்கிறார்கள். முந்தைய காலத்தில் செல்போன் என்பது வெறும் போன் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. காலம் மாறியது இண்டர்நெட்டும் வந்தது. படிப்பு சம்பந்தபட்ட விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து இண்டெர்நெட்டில் ஆதிக்கம் அதிகரிக்க பேஸ்புக் செயலி கொண்டு வரப்பட்டது. இந்த செயலி மூலம் பலரும் நாட்டில் எங்கெங்கோ உள்ளவர்களிடம் கூட மெசேஜ் செய்ய முடிந்தது. இதையடுத்து வாட்ஸ் - அப்பும் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டும் தான் 90ஸ் கிட்ஸ்களின் ஆப் ஆகும். அவர்கள் அதிகம் பயன்படுத்திய ஆப்கள் இதுவே.
தற்போது இதில் அதிகம் இருப்பவர்களை பூமர் என்றே கருதுகிறார்கள். அப்போ இப்போதைய காலத்தில் உள்ளவர்களின் ஆப் என்ன தெரியுமா.. அதுதான் இன்ஸ்டாகிராம். தற்போது இன்ஸ்டாகிராம் இல்லாத இளைஞர்களை காணுவது எளிதாகிவிட்டது.
நேரக்கணக்கில்லாமல் இன்ஸ்டாகிராமில் பலரும் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர். இவர்களை தக்க வைக்கும் விதமாக இதில் ரீல்ஸ், ஸ்டோரிஸ், போஸ்ட்ஸ் என விதவிதமாக ஃபீச்சர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் சமீப காலமாகதான் பலரும் இருப்பதால், சிலருக்கு இதில் உள்ள டெக்னாலஜி விஷயங்கள் தெரிவத்தில்லை. உதாரணத்திற்கு டவுன்லோடு செய்வது, பிறருக்கு வீடியோவாக அனுப்புவது உள்ளிட்ட பல விஷயங்கள் தெரியாது. பலரும் இன்ஸ்டாகிராம் டவுன்லோடர் ஆப் மூலமே டவுன்லோடு செய்கின்றனர்.
எளிதில் எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும் என பார்க்கலாம்:
முதலில் உங்களில் மொபைலில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை ஓபன் செய்யவும். நீங்கள் தற்போது எந்த ரீல்ஸை டவுன்லோடு செய்ய வேண்டுமோ அதை க்ளிக் செய்ய வேண்டும்
இதனை தொடர்ந்து நீங்கள் இதுவரை நண்பர்களுக்கு எப்படி ரீல்ஸ்களை சேர் செய்வீர்களோ அந்த ஐகானை க்ளிக் செய்யவும்
பின்னர் ரீல்ஸ் வீடியோவை காபி செய்து https://igram.io/ என்ற இணையதளத்தில் உங்களது ரீல்ஸ் லிங்கை பேஸ்ட் செய்ய வேண்டும்
பின்னர் உங்களது பக்கத்தை Refresh செய்து URLஐ க்ளிக் செய்து கொள்ளவும். தொடர்ந்து டவுன்லோடு MP4 பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த வீடியோவை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.