இந்திய அரசின் UIDAI இணையதளத்தின் மூலமாக ஆதார் எண்ணின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடைமுறைகள் பயன்பாட்டில் உள்ளது.
ஆதார் இந்தியாவின் மிக முக்கிய அடையாள ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்ல போனால் வர்த்தகத்தில் தொடங்கி, மற்ற சான்றுகளின் இணைப்பு ஆவணமாகவும், என்று அனைத்து தேவைகளிலுக்கும் ஆதார் முக்கிய ஆவணமாக மாறி இருக்கிறது.
இதனால் பொதுமக்கள் தினம்தோறும் ஆதாரை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இதை சில விஷமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆதார் எண்ணை திருடி பல்வேறு வகையான முறைகேடுகளுக்கு பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான ஆவணமான ஆதார் எண்ணில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக UIDAI இணையதளத்தில் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு வருகின்றன.
ஆதார் கார்டு அன்றாட பயன்பாடாக மாறி இருப்பதால் ஆதார் எண்கள் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதற்கு பதிலாக ஆதார் எண்ணுக்கு மாற்றாக virtual ID-யை பயன்படுத்திக் கொள்ளலாம். இது 16 இலக்கு கொண்ட டெம்ப்ரவரி நம்பர் ஆகும். இது குறிப்பிட்ட காலம் பயன்பாட்டில் இருந்து பிறகு தானாக செயல் இழந்து விடும்.
மேலும் ஆதார் கார்டை சில மாதங்கள் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று கருதுபவர்கள். ஆதார் எண்களை குறிப்பிட்ட காலம் லாக் செய்து கொள்ளலாம். பிறகு எப்போது தேவை ஏற்படுகிறது அப்பொழுது அன்லாக் செய்து கொள்ளும் வசதியும் UIDAI இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆதார் எண்ணில் எத்தனை சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் UIDAI இணையதளத்தின் வாயிலாக அறிய முடியும். மூன்றாம் தர செயழிகளில் ஆதார் எண்ணை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆதார் எண்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைத் தவிர பிற நிறுவனங்களின் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஆதார் சம்மந்தமான தகவல்களை பெற விரும்புவோர் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவோர் UIDAI இணையதளத்திற்கு சென்று தேவையான நிலையை தேர்வு செய்து, பிறகு விவரங்களை தெரியப்படுத்தி, தொலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி-யை பதிவு செய்து உறுதி செய்தால் போதுமானது.