ரிமோட் சாவி வசதியுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.

ரிமோட் சாவி வசதியுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.

Okaya நிறுவனம் Fast F2F என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் காரில் இருப்பது போலவே ரிமோட் சாவியைப் பயன்படுத்தி ஸ்டார்ட் செய்யலாம். 

போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக Okaya நிறுவனம் தன்னுடைய எலக்ட்ரிக் மாடல் ஸ்கூட்டரை மின்வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் அறிமுக விலை 83,999 ரூபாய் மட்டுமே. ஏற்கனவே Okaya Fast F3 என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதத்தில் இவர்கள் வெளியிடும் இரண்டாவது ஸ்கூட்டர் இதுவாகும். ஒரு முழு சார்ஜில் 80 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்கலாமாம். 

60V 36 ஆம்ஸ் லித்தியம் அயன் பேட்டரி இதில்  பயன்படுத்தப்பட்டுள்ளது. 800 வாட்ஸ் செயல்திறன் கொண்ட BLDC ஹப் மோட்டார், இதன் செயல் திறனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு என்று பார்க்கும் போழுது, மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடும் என்கிறார்கள். இதன் பேட்டரி மற்றும் மோட்டார் இரண்டிற்கும் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்குவதாக அந்நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

‘மாணவர்கள், குடும்பப் பெண்கள், இளம் தலை முறையினர் மற்றும் தினசரி அலுவலகம் சென்று வருபவர்களுக்கு இந்த வாகனம் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். எனவே இதை அனைவரும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் நாங்கள் கொடுக்கிறோம்’ என ஒக்காயா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கரடு முரடான சாலைக்கு ஏற்ற வகையில், டெலஸ்கோபிக் மற்றும் ஸ்ப்ரிங் லோடெட் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்பர் இந்த வாகனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது தவிர டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ரிமோட் சாவி, நல்ல வெளிச்சம் தரக்கூடிய ஹெட்லாம்ப மேலும் பல அம்சங்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. 

முழு சார்ஜ் பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?

ல்ல ஆற்றல் கொண்ட ஹப்மோட்டர் இதில் உள்ளதால், அதற்கு ஏற்றவாறான பேட்டரியும் பயன்படுத்தப் படுகிறது. எனவே ஒரு முறை பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். 

இதில் மொத்தம் மூன்று விதமான ரைடிங் மோட்கள் உள்ளன. ஈகோ என்ற அம்சத்தில் மெதுவாக நீண்ட தூரம் பயணிக்கலாம். சிட்டி என்ற அம்சத்தில் இன்னும் சற்று வேகமாக பயணிக்கலாம். இறுதியாக ஸ்போர்ட்ஸ் மோடில் இந்த வாகனத்தின் அதிக வேகத்தில் பயணிக்க முடியும். தற்போது நாடு முழுவதும் 550 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், அனைத்து ஷோரூம்களிலும் இந்த வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. 

மேலும், இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் முன்பதிவு செய்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். மெட்டாலிக் கிரே, மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சில்வர், மெட்டாலிக் ஒயிட் மேட் கிரீன், மற்றும் மெட்டாலிக் சையன் போன்ற ஆறு விதமான நிறங்களில் இந்த வாகனம் நமக்குத் தற்போது கிடைக்கிறது. 

இந்த வாகனத்தில் அனைவரும் ஈர்க்கும் வகையில் இருப்பதே ரிமோட் சாவிதான். வயர்லெஸ் தொழில் நுட்பத்தை சிறப்பாக இதில் பயன்படுத்தி இருக்கிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com