மரத்தினால் மின்சார வாகன பேட்டரியை உருவாக்க முடியும்?

Electric vehicle Batteries.
Electric vehicle Batteries.

மரத்தினால் மின்சார வாகன பேட்டரியை உருவாக்கும் திட்டத்தை பின்லாந்தை சேர்ந்த நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிசக்தி பயன்பாட்டை குறைக்கவும் மின்சார வாகன போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மின்சார வாகன தேவை நாளுக்கு நாள் பெருமளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் அதில் உள்ள சிக்கல்களை தணிக்கும் பொருட்டு மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு மின்சார வாகன கண்டுபிடிப்புகளில் பல்வேறு புதுமைகளை மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் பின்லாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய காகித ஆலை நிறுவனமான ஸ்டோரா என் சோ மரத்திலிருந்து மின்சார வாகன பேட்டரியை உருவாக்க முடியும் என்ற நவீன திட்டத்தை வகுத்து இருக்கிறது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பேட்டரிகளில் புதை படிம எரிபொருட்களை பயன்படுத்தி பேட்டரியில் உள்ள அனோட் என்ற நேர்மின் வாயு பகுதி வழியாக பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் மரங்களில் இருந்து கிடைக்கும் லிக்னின் எனும் படிமத்தை பிரித்தெடுத்து வாகனங்களுக்கு தேவையான கார்பன் மூலப்பொருட்களை தயாரிக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் உருவாக்கப்படும் பேட்டரிகளில் மின்சாரத்தை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்றும், பேட்டரியின் விலையை குறைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் ஐபோன் பேட்டரி செல் தயாரிப்பு !
Electric vehicle Batteries.

மேலும் இந்த புதிய வகை பேட்டரி இயற்கைக்கு தீங்கை ஏற்படுத்தாத பசுமை பேட்டரியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வகை பேட்டரி 2025ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com