ஸ்மார்ட் டிவிகளுக்கான வீடியோ செயலியை ட்விட்டர் விரைவில் அறிமுகப்படுத்தும் என எலான் மஸ்க் அறிவிப்பு!

ஸ்மார்ட் டிவிகளுக்கான வீடியோ செயலியை ட்விட்டர் விரைவில் அறிமுகப்படுத்தும் என எலான் மஸ்க் அறிவிப்பு!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அவரது ட்வீட் ஒன்றில், "விரைவில் ஸ்மார்ட் டிவிகளுக்கான வீடியோ செயலியை, ட்விட்டர் விரைவில் அறிமுகப்படுத்தும்" எனத் தெரிவித்திருந்தார். இது twitter பயனர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் எஸ்.எம் ராபின்சன் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், தனது ட்வீட் ஒன்றில், "ஸ்மார்ட் டிவிகளுக்கான ட்விட்டர் வீடியோ செயலி எனக்குத் தேவை. நான் ட்விட்டரில் ஒரு மணி நேர வீடியோவைப் பார்ப்பது கடினமாக இருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, "அது விரைவில் வரும்" என்று எலான் மஸ்க் Retweet செய்திருந்தார். இதற்கு அந்தப் பயனரும் "இதை நான் பாராட்டுகிறேன். யூட்யூபுக்கான எனது சந்தாவை ரத்து செய்வதற்கான ஒரு நாள் விரைவில் வரும் என நான் நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

எலான் மஸ்க் அவர்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கான வீடியோ செயலியின் அறிவிப்பு, ட்விட்டரை அதிக வீடியோ மையமாக மாற்றுவதில் அவர் தீவிரம் காட்டி வருவதைக் காட்டுகிறது. சமீபத்தில் தான் ட்விட்டரில் வீடியோவை பதிவேற்றும் வசதி கொண்டுவரப்பட்டது. மேலும் பயனர்கள் வீடியோக்களை பார்ப்பதற்கும் பகிர்வதற்கும் எளிதாக இருக்கும் வகையில், அந்நிறுவனம் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் டிவிகளில் twitter வீடியோ செயலி என்ற முயற்சி, இதன் அடுத்த கட்ட மேம்படுத்தலின் முன்னெடுப்பாகும். இது மக்கள் தங்கள் டிவிகளில் ட்விட்டர் வீடியோக்களைப் பார்ப்பதை எளிதாக்கும்.

எலான் மஸ்க் ட்விட்டரை மிகவும் துடிப்பான மற்றும் அதிக ஈடுபாடு கொண்ட தளமாக மாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். இது சார்ந்து அவர் திட்டமிட்டுள்ள பல மாற்றங்கள் குறித்தும் அவர் சொல்லியிருந்தார். இந்த மாற்றங்களில் முக்கியமானவை, காணொளி பதிவேற்றுவது மற்றும் காணொளி பதிவேற்றும் நபர்களுக்கு பணம் செலுத்துதல் தொடர்பான முன்னெடுப்புகளாகும். காணொளிகள் தான் சமூக ஊடகங்களின் எதிர்காலம் என எலான் மாஸ் நம்புகிறார். இந்த நிலைப்பாட்டில் ட்விட்டரை முதல் இடத்திற்குக் கொண்டுவர விரும்புகிறார் என்பது அவர் வெளியிடும் அறிவிப்புகளின் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

இதனால், எலான் மாஸ்க் எடுக்கும் முயற்சிகள் அதிக பயனர்களை twitter பக்கம் ஈர்க்கும் என அவர் நம்புகிறார். இன்னும் சில வாரங்களில் ட்விட்டரில் கிரியேட்டர் பதில்கள் மற்றும் காணொளிகளில் காட்டப்படும் விளம்பரங்களுக்கு பணம் செலுத்தப்படும் எனத் தெரிவித்து, இதற்காக முதல் கட்டமாக 5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் டுவிட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்கைக் கொண்டவர்கள், இரண்டு மணி நேர வீடியோவை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதியும் வழங்கியது twitter நிறுவனம்.

இதுபோன்ற காணொளி சார்ந்த முயற்சிகள் ட்விட்டர் நிறுவனத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை எலான் மஸ்க் முழுமையாக நம்புகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com