இந்தியாவில் தடம் பதிக்கும் எலான் மஸ்க்; கலக்கத்தில் டெலிகாம் நிறுவனங்கள்!

Elon Musk set foot in India.
Elon Musk set foot in India.
Published on

ந்தியாவில் தற்போது டெலிகாம் சேவையில் முன்னணியில் இருப்பவை ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தன். இந்த நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இந்தியாவில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் தடம் பதிக்க உள்ளது.

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல தலைசிறந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவருக்குச் சொந்தமான சாட்டிலைட் வழியாக இன்டர்நெட் வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம், உலக அளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. இதற்காக 4000க்கும் அதிகமான சேட்டிலைட்டுகளை ஸ்டார்லிங்க் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது.

இதனால் பல நாடுகளின் உள்நாட்டு நிறுவனங்களின் நிலை மோசமாக இருக்கிறது. ஸ்டார்லிங்க் மூலமாக  இன்டர்நெட் சேவை நேரடியாக சேட்டிலைட் வழியாக வழங்கப்படுவதால், டெலிகாம் நிறுவனங்கள் சேவை வழங்காத இடங்களிலும் இதைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, இயற்கை பேரிடர் காலங்களில் தடை இல்லாமல் இன்டர்நெட்டை மக்கள் பெறலாம்.

இந்த சேவை உக்ரைன் - ரஷ்யா போரின்போது கூட எவ்வித இடையூறுமின்றி இணைய சேவையை வழங்கியது. இதனால் அரசாங்கத்தின் உதவிகள் தடையில்லாமல் மக்களுக்குச் சென்றது. எனவே, எதிர்காலத்தில் சாட்டிலைட் மூலமாக இன்டர்நெட் சேவை வழங்கும் முறை மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் என்பதை உலக நாடுகள் நம்புகிறது. இந்தியாவிலும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் சேட்டிலைட் மூலமாக இணைய சேவை வழங்கும் பணிகளில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர். இவர்கள் அதற்கான முதற்கட்ட வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எலான் மஸ்க்கும் இந்திய டெலிகாம் துறையில் நுழைவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 2022லேயே மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் இது குறித்த உரிமத்துக்காக அவர் விண்ணப்பித்திருந்தார். இருப்பினும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எத்தகைய ஒப்புதலும் கிடைக்காததால், அந்த சேவைக்கான ப்ரீ புக்கிங் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய தொலைத்தொடர்பு துறையும், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

செப்டம்பர் 20ம் தேதி நடக்க இருக்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு மட்டும் ஒப்புதல் கிடைத்துவிட்டால், இந்தியாவில் சாட்டிலைட் மூலமாக இன்டர்நெட் சேவையை ஸ்டார்லிங்க் நிறுவனம் விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com