புதிய நிறுவனம் தொடங்கிய எலான் மஸ்க். யாருக்கு ஸ்கெட்ச்?

ட்விட்டர் சிஇஒ எலான் மஸ்க்
ட்விட்டர் சிஇஒ எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக மார்க் ஜுக்கர்பெர்க் திரெட் செயலியை அறிமுகம் செய்ததிலிருந்தே அவர் மீது கடும் கோபத்தில் எலான் மஸ்க் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மார்க்குக்கு எதிராக எலான் மஸ்க் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்து வந்த வேளையில், இரவோடு இரவாக புதிய நிறுவனத்தையே தொடங்கிவிட்டார். 

இந்த நிறுவனம் Threads செயலிக்கு எதிராக சரியான பதிலடியாக இருக்கும் என நீங்கள் எண்ணினால், அதுதான் தவறு. இந்த புதிய ஸ்கெட்ச் சுந்தர் பிச்சைக்கு. ஏனென்றால் எலான் மஸ்க் புதியதாக தொடங்கி இருப்பது செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிறுவனமாகும். அதன் பெயர் xAI. இதை கூகுள் நிறுவனத்திற்கான ஸ்கெட்ச் என சொல்வதைவிட, Ai தொழில்நுட்பத்தில் வேலை செய்வது வரும் எல்லா நிறுவனங்களுக்குமான ஸ்கெட்ச் என்றுதான் சொல்ல வேண்டும். இது Google Bard, ChatGPT, Bing Ai உள்பட எல்லா நிறுவனத்திற்குமே தொல்லையாக இருக்கும். 

எலான் மஸ்கின் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனம் பற்றிய அறிவிப்பை நேற்று ஒரு ட்வீட் வழியாக உறுதி செய்தார். அந்த ட்வீட்டில் உண்மையைப் புரிந்து கொள்வதற்காக புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த நிறுவனம் பற்றி முழுமையாக விளக்குவதற்கு வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதுபடி, அந்த நிறுவனத்தின் குறிக்கோள் "பிரபஞ்சத்தின் உண்மையை புரிந்து கொள்வதாகும்". மேலும் இந்த நிறுவனம் எலான் மஸ்கின் நேரடி தலைமையின் கீழே செயல்படும். அதாவது Tesla, SpaceX நிறுவனம் போலவே xAI நிறுவனத்திற்கும் இவர்தான் சிஇஓ. 

இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், OpenAi, Deep Mind, Google research, Microsoft research போன்றவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் எலான் மஸ்கின் நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். xAI நிறுவனத்தில் ஏஐ பாதுகாப்பு மையத்தை கவனித்துக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டான் ஹென்ட்ரிக்சின், இந்த புதிய நிறுவனம், ஏஐ தொடர்பான சமூக அபாயங்களை குறைக்கும் நோக்கில் செயல்படும் லாப நோக்கமற்ற அமைப்பு என்று கூறியுள்ளார். 

முடிவில், எலான் மஸ்க்கும் ஏஐ தொடர்பான விஷயத்தில் காலடி எடுத்து வைத்துவிட்டார் என்பது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் ஏற்கனவே OpenAi நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com