மனித ரோபோக்களை அடுத்த ஆண்டு களமிறக்கும் எலான் மஸ்க்!

Elon Musk will launch human robots next year!
Elon Musk will launch human robots next year!
Published on

எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும் போது தொழில்நுட்பம் எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒன்றாகவே இருக்கும். அந்த வகையில் எலான் மஸ்கின் எதிர்காலம் சார்ந்த கனவுகள், மனித குலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் புரட்சிகரமான விஷயங்களாகும். அத்தகைய புரட்சிகளில் ஒன்றுதான் 2025 இல் வெளியாக இருக்கும் எலான் மஸ்கின் மனித ரோபோ (Optimus). இந்தப் பதிவில் எலான் மஸ்கின் மனிதரோபோ தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாகப் பார்க்கலாம். 

எலான் மஸ்கின் மனித ரோபோ, மனிதர்களின் உடல் வடிவமைப்பை ஒத்திருக்கும் வகையில் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மனிதர்கள் செய்யும் பல பணிகளை செய்யும் திறன் கொண்டது. இதன் மூலமாக மனிதர்கள் செய்யும் சலிப்பான, ஆபத்து நிறைந்த பணிகளை இனி இந்த ரோபோக்கள் மேற்கொள்ளும். இதனால், மனிதர்கள் மேலும் படைப்புத்திறன் கொண்ட வேலைகளில் ஈடுபட முடியும். 

ரோபோவின் முக்கிய அம்சங்கள்: 

இந்த ரோபோ மனிதர்களைப் போல நடந்து, பேசி செயல்படும். இதனால், மனிதர்களுடன் இந்த ரோபோக்கள் இயல்பாக பழக முடியும். இவற்றின் உயர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக, சிக்கலான பணிகளை தானாகவே செய்து முடிக்க முடியும். தானாகவே பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டது இந்த ரோபோ. இவற்றால் பல்வேறு விதமான பணிகளையும் எளிதாக செய்ய முடியும். 

எதிர்காலத் தாக்கங்கள்: 

இந்த ரோபோக்கள் தொழில்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். மனிதர்கள் செய்யும் பல பணிகளை இந்த ரோபோக்கள் மேற்கொண்டு உற்பத்தி திறன் அதிகரிப்பதால், பொருட்களின் விலை குறையும். ஒருவேளை இந்த ரோபோக்கள் சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்பட்டால் ,அறுவை சிகிச்சை, நோயாளிகளை பராமரித்தல் போன்ற பணிகளுக்கு இவை பெரிதளவில் உதவும். இதனால், சமூகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு மனிதர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். ஆனால், இவற்றால் வேலையின்மை பிரச்சனை ஏற்படும் சவால்கள் உள்ளது. 

இதையும் படியுங்கள்:
மூச்சு விடும் ரோபோ | Benefits of AI in Healthcare | மருத்துவர்களுக்கு உதவும் மோனா ரோபோ
Elon Musk will launch human robots next year!

இந்த ரோபோக்கள் மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் என்பதால், வேலையின்மை பிரச்சனை அதிகரிக்கக் கூடும். இவற்றை தீயவர்கள் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தினால் பாதுகாப்பு பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளது. மேலும், இந்த ரோபோக்களின் உருவாக்கம் மற்றும் பயன்பாடு போன்றவை சில குறிப்பிட்ட சவால்களுக்கு வழிவகுக்கும். 

2025 ஆம் ஆண்டில் இந்த ரோபோக்கள் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, டெஸ்லா நிறுவனத்தில் முதல் முறை பயன்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பின்னர், 2026 ஆம் ஆண்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com