ஒருமுறை சார்ஜ் போட்டால் 94 நாட்கள் சார்ஜ் நிக்கும்.. என்னடா போன் இது? 

Energizer Hard Case P28.
Energizer Hard Case P28.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவெனிர் டெலிக்கம் என்ற நிறுவனம் 18000 mAh பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது அதைவிட மூர்க்கத்தனமான ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த யுகத்தை கலியுகம் என்று சொல்வதற்கு பதிலாக, ஸ்மார்ட்போன் யுகம் என்று சொல்லும் அளவுக்கு உலகில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம். ஒரு காலத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், இப்போது புதுப்புது அம்சங்களுடன் வாராவாரம் புதுப்புது மாடல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த வரிசையில் இப்போது உலகிலேயே அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதன் பேட்டரி அளவை கேட்டால் நீங்கள் அதிர்ந்து போய் விடுவீர்கள். சுமார் 28000 mAh அளவிலான பேட்டரியில், பார்ப்பதற்கு ஒரு மினி சைஸ் செங்கல் போல அந்த ஸ்மார்ட்போன் உள்ளது. அதன் பெயர் Energizer Hard Case P28. நீங்கள் எந்த இடைவெளியுமின்றி தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை இதன் பேட்டரி நீடிக்கும் என நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. 

இந்த சாதனத்திற்கு IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் உள்ளே புகாது. அதேபோல தூசி, டேமேஜ் போன்றவற்றிற்கு எதிராக கடுமையான பில்ட் குவாலிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த ஸ்மார்ட் போனில் 122 மணி நேரம் பேசலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் போட்டு பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தால், 94 நாட்கள் வரை இதன் பேட்டரி நீடித்து உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
இஷன் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐய்யரை கழட்டிவிட்ட BCCI.. இந்திய அணியில் மீண்டும் விளையாடுவார்களா?
Energizer Hard Case P28.

இதன் மிகப்பெரிய குறையாகப் பார்க்கப்படுவது இதன் எடை. கிட்டத்தட்ட 570 கிராம். இது தவிர இதன் தடிமன் 27.8 மில்லி மீட்டர். சாதாரண ஸ்மார்ட்போனை விட மூன்று மடங்கு எடை அதிகமாக உள்ளது. இதை 33 வாட் வரை வேகமாக சார்ஜ் செய்யலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள 36 வாட்டு சார்ஜரைப் பயன்படுத்தி ஒன்றரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என அவெனிர் நிறுவனம் கூறுகிறது.  

ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு ஏற்ற வகையில், மீடியா டெக் MT 6789 சிப்செட்டுடன், 8 ஜிபி ரேம் 256 GB ரோம், மூன்று பின்பக்க கேமராக்கள் உள்ளது. 6.78 இன்ச் LED டிஸ்ப்ளே உடன் ஆண்ட்ராய்டு 14 OS உடன் வெளிவந்துள்ளது. இந்த சாதனத்தை அனைவரும் வாங்கும் வகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முழு விற்பனையைத் தொடங்க உள்ளனர். இவ்வளவு அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட் போனை €299.9 விற்க அவெனிர் டெலிகாம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com