பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிறர் கண்காணிப்பதை தடுப்பது எப்படி?

Facebook & Instagram.
Facebook & Instagram.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களை மெட்டா நிறுவனம் நோட்டம் விடுவதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனம் தற்போது புதிய பிரைவசி அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் தங்களை யார் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து தடுக்க முடியும் என சொல்லப்படுகிறது.

Activity Off-Meta என்ற புதிய அம்சம் மூலமாக மெட்டா மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பயனர்களின் டேட்டாக்களை யார் பார்க்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் பிரைவசியை தேர்ந்தெடுக்கும் முறைகள் இதில் அடங்கும். இதன் மூலமாக எந்தெந்த பிசினஸ் நிறுவனங்களுக்கு, மெட்டா தன் பயனர்களின் தரவுகளை அனுப்புகிறது என்பதை ஒவ்வொரு பயனரும் கண்காணித்து அதை முடக்க முடியும். யாராவது உங்களுடைய டேட்டாவை பகிர்வது போல் உங்களுக்குத் தெரிந்தால் அவற்றை நீங்களே தடை செய்து டேட்டாக்களை கிளியர் செய்யலாம்.

இந்த அம்சத்தை இன்ஸ்டாகிராமில் எனேபிள் செய்ய, உங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கிற்குச் சென்று, ப்ரொபைல் பிக்சருக்கு அருகில் இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டவும். அதன் பின்னர் Settings and Privacy உள்ளே சென்று Activity என்பதைத் தொட்டால், Activity off Meta Technologies என வரும். இதன் உள்ளே சென்று Disconnect User Activity என்பதை ஆன் செய்தால் இனி யாரும் உங்களை இன்ஸ்டாகிராமில் கண்காணிக்க முடியாது. 

பேஸ்புக்கில் இந்த அம்சத்தை எனேபிள் செய்ய, பேஸ்புக் கணக்கின் வலது மூலையில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Settings and Privacy உள்ளே சென்று செட்டிங்ஸ் என்பதை தொடவும். அதன் பிறகு Your Facebook Information உள்ளே சென்று Off Facebook activity கிளிக் செய்தால், இந்த அம்சத்தை மேனேஜ் செய்யும் ஆப்ஷன் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று டெல்கிராமிலும் ஸ்டோரியா!
Facebook & Instagram.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உங்களை யாரும் கண்காணிக்காதவாறு ஒவ்வொரு பயனரும் தடுக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com