கூகுள் கண்ட தோல்விகள்!

Failures of Google
Failures of Google

புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் உலகையே மாற்றியமைக்கும் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற நிறுவனமான கூகுள், பல கண்டுபிடிப்புகளில் தோல்வியையும் கண்டுள்ளது. கூகுள் சர்ச் எஞ்சின், ஆண்ட்ராய்டு மற்றும் யூடியூப் போன்ற தயாரிப்புகள் மூலமாக அந்நிறுவனம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், அது தொட்ட அனைத்துமே தங்கமாக மாறவில்லை என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். 

கூகுளின் தோல்விகள்:

கூகுள் வேவ்: 2009இல் கூகுள் வேவ் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இணையத்தில் தகவல் தொடர்பில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தும் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது. தொடக்கத்தில் இது மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் இதற்கான போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே இது 2010ல் நிறுத்தப்பட்டது. 

கூகுள் கிளாஸ்: கூகுள் கிளாஸ் எனப்படும் அகுமெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட் முதலில் அறிவிக்கப்பட்டபோது உலகில் ஒரு சலசலப்பை உருவாக்கியது. இருப்பினும் இதனால் மக்களின் தனியுரிமையில் ஏற்படும் பாதிப்புகள், அதிக விலை மற்றும் நிஜஉலகப் பயன்பாடு காரணங்களால் 2015ல் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. 

Google Plus: இது 2011 இல் தொடங்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பேஸ்புக்கின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்திற்காக கூகுள் பிளஸ் கொண்டுவரப்பட்டது. இதில் கூகுளின் அதிகப்படியான முயற்சிகள் இருந்தபோதிலும் மக்கள் இதை விரும்பவில்லை. பல கால போராட்டத்திற்குப் பிறகு இறுதியில் 2019 ஆம் ஆண்டு கூகுள் பிளஸ் மூடப்பட்டது. கூகுள் பிளஸ் இன் தோல்வியானது ஒரு வரையறுக்கப்பட்ட சந்தைக்குள் நுழைவதன் சிரமத்தையும், புதிய தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் உள்ள கடினத்தையும் அடிகோட்டிட்டு காட்டியது. 

கூகுளின் மெசேஜிங் ஆப்ஸ்: கூகுள் டாக், கூகுள் ஹேங்கவுட், கூகுள் ஹலோ மற்றும் கூகுள் டியோ போன்ற பல மெசேஜிங் ஆப்ஸ்களை கூகுள் பல ஆண்டுகளாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் பயனர்கள் பயன்படுத்துவதற்கு குழப்பத்தை ஏற்படுத்தியதால், மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. அந்நேரத்தில் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் போன்ற போட்டியாளர்கள் முன்னேறிக் கொண்டிருந்தனர். எனவே கூகுளின் மெசேஜிங் செயலிகளால் வெற்றி காண முடியவில்லை. 

இது தவிர மேலும் பல தோல்வி கண்டுபிடிப்புகளை கூகுள் கொடுத்துள்ளது. தொழில்நுட்பம் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும் உலகில், தோல்வி என்பது புதுமையின் ஒரு பகுதிதான். கூகுளின் தோல்வி கதைகள், தலைசிறந்த முயற்சிகளின் ஆதாரமாக விளங்குகிறது. அதாவது மிகப்பெரிய ஜாம்பவான்கள் கூட தங்களின் வெற்றிப் பாதையில் தடுமாறலாம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. 

இத்தகைய தோல்வி அனுபவங்கள் மூலமாகவே, பல விஷயங்களை கற்றுக் கொண்டு, கூகுள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையும் எதிர்காலத்தை வடிவமைக்கும் பல தயாரிப்புகளை உருவாக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com