சாம்சங் நிறுவனம் தனது விற்பனையை உயர்த்துவதற்காக சாம்சங் ஏ9 சீரிஸ் டேப்லெட்டை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் முன்னணி ஆண்ட்ராய்டு போன் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை கூட்டுவதற்கு தீவிர முயற்சியை தொடங்கி உள்ளன. இதற்காக மார்க்கெட்டிங் மற்றும் நியூ மாடல்கள் அறிமுகம் என்று பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து தீவிரமாக செயலாற்றுகின்றன. இந்த நிலையில் தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் போன்களின் விற்பனை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாம்சங் கேலக்ஸி டேப் வகைகளின் புதிய டேப்லெட்டை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது.
இவ்வாறு சாம்சங் டேப்லட் ஏ9 ப்ளஸ் என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாடல் 11 இன்ச் எல் சி டி டிஸ்ப்ளே கொண்டது. மேலும் பல டாங்குகளாக பயன்படுத்தக்கூடிய வசதி உள்ளது. ஸ்மூத் அப்ளிகேஷன் சிஸ்டம் இணைக்கப்பட்டிருக்கிறது. தடையற்ற 5 ஜி இணைப்பு, 8 மெகாபிக்சல் கேமரா, முன்புறம் 5 மெகா பிக்சல் கேமரா என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டு இந்த டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அறிமுக சலுகையாக 18, 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் டேப்லெட் ஏ9 என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 8.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது இது அறிமுக விலையாக 12,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விற்பனை செய்யப்படும் இடங்களை பொறுத்து கூடுதல் சலுகையும் குறிப்பிட்ட டேப்லெட்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது.