என்சோ ஃபெராரியின் சிகப்புப் புரட்சி! ஃபெராரியின் முதல் எலக்ட்ரிக் கார் 'லூசி' அசுரவேகப் பயணம்!

Ferrari Luce - எலக்ட்ரிக் கார்
Ferrari Luce - எலக்ட்ரிக் கார்AI Image
Updated on

என்சோ ஃபெராரி முதல் நவீன எலக்ட்ரிக் கார் வரை ஒரு வரலாற்றுப் பார்வை:

என்சோ ஃபெராரி (Enzo Ferrari) ஒரு இத்தாலிய பந்தய கார் ஓட்டுநரும், தொழில்முனைவோரும் ஆவார். இவர் உலகப் புகழ்பெற்ற ஸ்கூடெரியா ஃபெராரி (Scuderia Ferrari) பந்தய அணியையும், ஃபெராரி (Ferrari) சொகுசு கார் நிறுவனத்தையும் உருவாக்கியவர். பிப்ரவரி 18, 1898 அன்று இத்தாலியின் மொடெனா நகரில் பிறந்தார். ஆகஸ்ட் 14, 1988 அன்று காலமானார்.

ஃபெராரி கல்லூரி சென்று படிக்கவில்லை .ஒரு பந்தய கார் ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் ஆல்ஃபா ரோமியோ (Alfa Romeo) நிறுவனத்திற்காகப் பந்தயங்களை நிர்வகித்தார். அதன் பின்னர் ஃபியட் கார் நிறுவனம் ஒன்றில் கார் சோதித்து ஓட்டும் 'டெஸ்ட் டிரைவிங் ' செய்யும் வேலையை செய்தார் . அந்நிறுவனம் இவருக்கு திடீரென வேலை இல்லை என்றதால் 1939-ல் ஸ்குடெரியா ஃபெராரியைத் தொடங்கி, 1947-ல் அதிகாரப்பூர்வமாக ஃபெராரி பிராண்டின் கீழ் கார்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.

என்சோ ஃபெராரிக்கு ரொம்ப பிடிக்கும் விஷயங்கள் இரண்டு ஒன்று சிகப்பு வண்ணம் மற்றொன்று குதிரைகள். இதனால் ஃபெராரி கார்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் வந்தன. ஃபெராரியின் உயிர் நண்பர் 'பராக்கர்' முதலாம் உலகப் போரின் போது விமானியாக பணியாற்றினார்.

அவரின் விமானம் போரின்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த ஒரு சின்னம்தான் முன்னங் கால்களை தூக்கிக் கொண்டு நிற்கும் கருப்பு குதிரை. தன் நண்பரின் நினைவாக அதைத்தான் தன் கார்களில் சின்னமாக்கினார். ஃபெராரி கார்கள் மற்ற வண்ணங்களில் தயாரித்தாலும் உலகில் ஓடும் 70 சதவீத கார்கள் சிவப்பு வண்ணத்தில்தான் இருக்கிறது.

ஃபெராரி ஃபார்முலா ஒன் வரலாற்றில் மிக நீண்ட மற்றும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றை உருவாக்கினார். இவரது தலைமையின் கீழ் ஃபெராரி கார்கள் பல உலக சாம்பியன்ஷிப்களை வென்றது.

ஃபெராரி 2008 முதல் வாடிக்கையாளர்களுக்கென தனியாக ஒரே ஒரு காரை ஸ்பெஷலாக 'ஸ்பெஷல் எடிசன்' என்ற பெயரில் தயாரித்து வழங்கி வருகிறது. உலகின் கோடீஸ்வரர்களும், பெரும் புள்ளிகளும் அந்த ஒரே ஒரு காரை வாங்குவதில் பெருமை கொள்கிறார்கள். உலகிலேயே அதிக விலை கொண்ட அதிகவேக கார்களை தயாரிப்பது ஃபெராரி நிறுவனம்தான்.

இத்தாலியின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான ஃபெராரி (Ferrari), லூசி (Luce) எனும் தனது முதல் முழுமையான மின்சார காரை ரோம் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. “Luce” என்றால் இத்தாலிய மொழியில் “ஒளி” என்று பொருள். இந்த கார், அதிகபட்சமாக 193 மைல் (310 கிமீ/மணி) வேகத்துடன் செல்லக்கூடியது.

Ferrari Luce - எலக்ட்ரிக் கார்
Ferrari Luce - எலக்ட்ரிக் கார்AI Image

இதன் விலை 500,000 யூரோ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் நான்கு கதவுகள் கொண்ட பெரிய மாடல் ஆகும். அசுரவேகத்தில் செல்லும் சொகுசுக் கார்களுக்குப் பிரபலமானது ஃபெராரி (Ferrari). 5 பேர் அமரக்கூடிய காரை அது அறிமுகம் செய்துள்ளது. இத்தாலிய நிறுவனத்தின் முதல் மின்சாரக் காரும் அதுவே. Ferrari கார்களில் வழக்கமாக இரண்டே கதவுகள்தான் இருக்கும். 2022இல் அறிமுகமான Ferrari Purosangue காரில் முதல் முறையாக 4 கதவுகள் இருந்தன. அதில் 4 இருக்கைகளும் இருந்தன. Luce காரிலும் 4 கதவுகள் இருக்கும்.

முன்னாள் ஆப்பிள் டிசைனர் ஜோனி ஐவ் தலைமையிலான Love From ஸ்டூடியோ இதன் வடிவமைப்பில் பங்கு பெற்றுள்ளது. ஃபெராரி, கடந்த பத்து ஆண்டுகளாக ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்து வந்த நிலையில், இப்போது மின்சார யுகத்தில் தைரியமான முன்னெடுப்பாக Luce-ஐ அறிமுகப் படுத்தியுள்ளது.

சீனாவின் BYD நிறுவனத்திற்குப் போட்டியாக களம் இறங்கும் புதிய எலக்ட்ரிக் கார்:

மே 2026-ல், ஃபெராரி நிறுவனம் தனது முதல் முழு எலக்ட்ரிக் காரான 'லூசி' (Luce)-ஐ போப் லியோ XIV (Pope Leo XIV) அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அதன் ஸ்டீயரிங் வீலைப் பரிசாக அளித்தது.

Luce அதிக விற்பனையை நோக்கி அல்ல, 'Luxury Electric Car' என்ற புதிய வரையறையை உருவாக்கும் முயற்சி எனக் கருதப்படுகிறது. சீனாவின் BYD போன்ற நிறுவனங்கள் புதுமையான EV-களை வெளியிடும் நிலையில், ஃபெராரி தனது அடையாளத்தை காப்பாற்றிக்கொண்டு, மின்சார யுகத்தில் முன்னோடி ஆக முயற்சிக்கிறது. அக்டோபர் 2026 முதல் வாடிக்கையாளர்களுக்கு Luce விநியோகம் தொடங்கும்.

இதையும் படியுங்கள்:
கார் நிறுவனம் இல்லையாம்! BMW முதன்முதலில் எதைத் தயாரித்தது தெரியுமா? அதிர்ச்சி பின்னணி!
Ferrari Luce - எலக்ட்ரிக் கார்

இந்தக் கட்டுரையின் மூலம் ஃபெராரி நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பப் பரிணாம வளர்ச்சி, அதன் லூசி காரின் அசுரவேகத் திறன் மற்றும் சர்வதேசச் சந்தையில் அது ஏற்படுத்தப் போகும் தாக்கங்களை மிகத் துல்லியமாக அறிந்துகொண்டு, உலகத் தரம் வாய்ந்த வாகனத் தொழில்நுட்ப அறிவை முழுமையாகப் பெறலாம்.

Reference: The Evolution of Scuderia Ferrari and Luxury Supercars

logo
Kalki Online
kalkionline.com