FIFISH E-GO: இந்த ட்ரோன் நீருக்கு அடியிலும் செல்லும்!

FIFISH E-GO
FIFISH E-GO

சமீப காலமாகவே தொழில்நுட்ப வளர்ச்சி அதிவேகமாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் டிரோன் எனப்படும் வானத்தில் பறக்கும் சிறிய ரக விமானம் விதவிதமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக நீருக்கு அடியில் செல்லும் ட்ரோனை ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ட்ரோன்கள் பெரும்பாலும் புகைப்பட கலைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில், அவற்றை கொஞ்சம் மேம்படுத்தி QYSEA டெக்னாலஜி என்ற நிறுவனம் நீருக்கடியில் செல்லும்படியான FIFISH E-GO என்ற ரோபோடிக் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இது நீருக்கு அடியில் ஒரு சுறா மீனைப் போல சுலபமாக செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த புதுமையான ட்ரோனில் உள்ள எல்லா பாகங்களையும் எளிதாக பிரித்து மாற்றிக் கொள்ளலாம். இந்த ரோபோவின் மேம்படுத்தப்பட்ட ஆற்றல், இமேஜிங் அமைப்பு மற்றும் ஏஐ அம்சங்கள் சக்தி வாய்ந்த ரோபோக்களில் ஒன்றாக இதை மாற்றியுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் ஆறு கருவிகளை பொருத்த முடியும். இதன் மூலமாக ஒரே சமயத்தில் கடல் சார் தொடர்பான சவாலான பணிகளை செய்ய முடியும். ட்ரோனில் பொருத்தப்பட்டிருக்கும் தனித்துவமான பேட்டரி அமைப்பு மூலமாக ட்ரோனை ஆப் செய்யாமலேயே பேட்டரியை மாற்ற முடியும்.

50 நிமிடங்களில் 90% சார்ஜ் ஏறக்கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ள இதன் சார்ஜிங் அம்சம், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 3 மணி நேரம் வரை தாங்கும் பேட்டரியைக் கொண்டுள்ளது. ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த மோட்டார்கள் நீருக்கடியில் நீரோட்டங்களை எதிர்த்து 5.6 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நீருக்கு அடியில் படம் பிடிக்க இதில் 4K அல்ட்ரா எச்டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
நவீன விவசாயம் - பூச்சிக்கொல்லி தெளிக்க டிரோன்!
FIFISH E-GO

FIFISH E-GO-ல் உள்ள ஏஐ அமைப்பு நீருக்கு அடியில் தானாகவே புரிந்து கொண்டு கண்காணிப்பு வேலைகளை செய்து, மீட்புப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த ட்ரோன் அமெரிக்காவின் அமேசான் இணையதளத்தில் சுமார் 7,300 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6 லட்சங்களுக்கு மேல். 

இந்த சாதனத்தால் ட்ரோன் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com