29-ம்தேதி வரும் இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் - இந்தியாவில் தென்படுமா?

இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை (29-ம்தேதி) நிகழ உள்ள நிலையில், இந்தியாவில் தெரியுமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
solar Eclipse
solar Eclipse
Published on

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை (மார்ச் 29-ம்தேதி) ஏற்பட உள்ளது. இது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும் என்பதால் இந்த நிகழ்வை இந்தியாவில் காண முடியாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும், இது சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியது. பகுதி சூரிய கிரகணம் என்பது நிலவு சூரியனை முழுமையாக மறைத்துவிடாது. மாறாக சிறியதாக, பாதியளவுக்கு மட்டுமே மறைக்கும். சுமார் 80 கோடி மக்கள் இதனை பார்க்க முடியும். ஆனால் இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது. ஆனால் நாசாவின் கூற்றுப்படி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.

இந்தியாவில், சூரிய கிரகணம் IST பிற்பகல் 2:20 மணிக்குத் தொடங்கி மாலை 6:13 மணிக்கு முடிவடையும்; தோராயமாக நான்கு மணி நேரம் நீடிக்கும். கிரகணம் மாலை 04:17 மணிக்கு உச்சத்தை அடையும். இருப்பினும், நேர வேறுபாடு மற்றும் நிகழ்வின் சீரமைப்பு காரணமாக இந்தியாவால் கிரகணத்தைக் காண முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்தானது. இது விழித்திரை காயங்கள் மற்றும் மீளமுடியாத கண் சேதத்தை ஏற்படுத்தும். சூரிய கிரகணத்தைக் பார்க்கும் போது எப்போதும் பொருத்தமான கண் பாதுகாப்பு கவசங்களை அணிய அறிவுறுத்தப்படுகிறது. அதாவது சூரிய கிரகணத்தைப் பார்க்க பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும் அல்லது சர்வதேச பாதுகாப்பு தரநிலை ISO 12312-2 ஐப் பின்பற்றும் கிரகணம் பார்ப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக, 2025-ம் ஆண்டுக்கு இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழும் என்று நாசா கணித்துள்ளது. முதலாவது மார்ச் 29-ம் தேதி (நாளை) திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது செப்டம்பர் 21-ம் தேதி நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பூரண சூரிய கிரகணம் - சுவையான சில செய்திகள்!
solar Eclipse

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com