போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட உதவும் 'Focus Mode'!

Focus Mode
Focus Mode

நீங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? இந்த சாதனத்திற்கு அடிமையாகிவிட்டது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியானால் அதற்கான தீர்வு அந்த ஸ்மார்ட்போனிலேயே உள்ளது. அதுதான் 'Focus Mode' என்ற அம்சம். 

எப்போதும் எந்த வேலையும் செய்யாமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்திக் கொண்டிருப்பதால் நாம் சோம்பேறியாக மாறி, பல வேலைகளை செய்யாமல் போகிறோம். நீங்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் உங்களுடைய எந்த வேலையும் சரியாக செய்ய முடியவில்லை என்று நினைப்பவராக இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்கில் இருக்கும் Focus Mode என்ற அம்சம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

ஒரு டைமர் போல செயல்படும் இந்த அம்சம், நீங்கள் அதிக நேரம் இதை பயன்படுத்துவதைக் குறைத்து முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்த உதவுகிறது. அதாவது உங்கள் கவனச் சிதறல்களை தகர்க்க உதவும் அம்சமாகும். செல்போனில் இருக்கும் மற்றொரு அம்சமான 'டூ நாட் டிஸ்டர்ப்' போலவே, நீங்கள் பிரேக் எடுக்க விரும்பும் போதெல்லாம் இந்த புதிய அம்சம் பேருதவியாக இருக்கும். 

இந்த அம்சத்தை நீங்கள் எனேபிள் செய்யும்போது, முதற்கட்டமாக உங்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தும் நோட்டிபிகேஷன்கள் அனைத்தையும் தடுக்கிறது. அத்துடன் உங்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும் எல்லா செயலிகளையும் விரைவாக பிளாக் செய்வதற்கு இது பயன்படுகிறது. இந்த Focus Mode அம்சத்தை குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 3 மணிநேரம் வரை இயக்க முடியும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் சாதனத்திற்கு எந்த நோட்டிபிகேஷனும் வராது. 

இந்த அம்சத்தை நீங்கள் Enable செய்ய முதலில் உங்கள் போனின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும். பின்னர் அதில் கீழே ஸ்க்ரோல் செய்தால், Digital Wellbeing and Parent Control என்ற ஆப்ஷன் இருக்கும். பின்னர் அதன் உள்ளே சென்று Focus Mode பகுதிக்குச் சென்றால், உங்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தும் செயலிகளை தேர்வு செய்யும்படி காட்டும். தற்போது அதில் நீங்கள் அனைத்து வைக்க விரும்பும் செயலிகளை தேர்வு செய்து, 'டேக் எ பிரேக்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், எவ்வளவு நேரம் இதை Enable செய்ய விரும்புகிறீர்கள் என தேர்வு செய்யச் சொல்லும். அதில் நீங்கள் பயன்படுத்த விரும்பாத ஆப்களை தேர்வு செய்ததும், Focus Mode அம்சம் எனேபிள் ஆகிவிடும். இதை நீங்கள் விரும்பும்போது நிறுத்திக்கொள்ளலாம்.

இந்த அம்சம் உங்கள் கவனச்சிதறலை நீக்கி, உற்பத்தித்திறனை மேம்படுத்த அதிகம் உதவும். இதனால் நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com