அட.. இனி சாப்பாடு எப்ப சாப்பிட்டாலும் சூடாகவே இருக்குமா? 

food warming mat
food warming mat
Published on


இப்போது பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் நிலையில் காலை நேரத்திலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது உணவுகளையும் தயார் செய்து வைத்து விடுகிறார்கள். இந்த உணவுகள் மதியம் வரை அல்லது இரவு வரை சூடாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு இருக்கும்.

அதே நேரத்தில் பணி முடிந்து வரும் களைப்புடன் வருபவரும் பெண்களும் உணவை சூடு சூடு செய்ய தயங்கி அதை அப்படியே வைப்பார்கள். சூடாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு சந்தையில் தற்போது இருக்கும் இந்த  ஃபுட் வார்மிங் மேட் (Food Warming Mat) நிச்சயம் உதவியாக இருக்கும் இதைப்பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.

Food Warming Mat என்பது உணவை சூட்டில் வைத்திருக்க உதவும் (keep warm) ஒரு மின் மேட்/பிளேட் ஆகும். இது சாதாரணமாக டேபிள்/டெப்லேட் மேல் வைத்து அதில் பானங்கள், உப்புமா, இடியாப்பம் , சோறு போன்றவைகள் இருக்கும் பாத்திரத்தை எப்போதும் வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் அதிலிருக்கும் உணவுகளும் சூடாகவே இருக்கும்.

எப்படி வேலை செய்கிறது?

மின்சாரத்துடன்  இணைக்கும்போது மேட் மெதுவாக வெப்பத்தை வழங்குகிறது. அந்த வெப்பம் நேரடியாக மேட்டின் மேற்பரப்பில் இருக்கும் பொருட்களுக்கு மிதமாக பரவுகிறது. நமக்கு ஏற்ற நேரத்தை அதில் செட் செய்து வைக்கும் வசதிகளும் உண்டு. மேலும் சில மாடல்கள் வெப்பநிலை கட்டுப்பாடு (Thermostat) உடனும் இருக்கும்.


இந்த மேட்கள் பல வழிகளில் பயன் தருகிறது. டீ/காபி போன்ற பானங்கள் மற்றும் காலை ,மதிய, இரவு சாப்பாட்டை வெப்பமாக வைத்திருக்க உதவுவதுடன் அதிக நபர்கள் கூடும் சிறு சிறு பார்ட்டி கூட்டங்களில் உணவை  ஆக வைத்து பாராட்டைத் தரும். அலுவலகங்களில் பணி நேரத்தில் டீ, சூப் போன்றவற்றை சூடு படுத்த முடியும். 


இந்த மேட்டை எளிய முறையில் பயன்படுத்தலாம் என்பதுடன் சுத்தம் செய்வதும் மிக ஈசி. அத்துடன் அதை வைக்க அதிக இடம் தேவையில்லை. உணவு தூய்மையாகவும் வெப்பமான நிலையில் இருப்பதால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இந்த மேட்டை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியம். நீர் அல்லது காபி போன்ற திரவங்கள் நேரடியாக மேட்டில் கசிவதைத் தடுக்க வேண்டும். நீண்ட நேரம் விட்டு அதிகமாக வெப்பம் பெறாத வகையில் thermostat கொண்ட மாடலை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக குழந்தைகள் அணுகாத வகையில் வைக்கவும்.

மேலும் பொருட்களுக்கான வெப்பநிலை செட் செய்வதிலும் கவனம் தேவை. காபி/டீ — ~60–70°C (serving temp)
சமைக்கப்பட்ட சாப்பாடு — ~65–75°C
(Food safety க்கு அதிகமாக heated state வைக்க வேண்டாம் — ஏனெனில் அதுவே உணவை வீணாக்கி விடும் (bacterial growth concerns).


பல்வேறு விலை, வசதிகள் மற்றும் பயன்பாட்டு தேவைகளுக்கு ஏற்ற  செராமிக், ஸ்டெயின்லெஸ் ,கிளாஸ் வகை மேட்கள் மார்க்கெட்டில் இருந்தாலும் நல்ல தேர்வுகளும் அவசியம் . உதாரணமாக தினசரி பயன்பாடு & கூட்டங்களுக்கு NEWDRU Heat Mat Pro – Food Heating Pad – எலக்ட்ரிக் வெப்ப மேட் adjustable temperature மற்றும் timer உடன், parties/குடும்ப விதவிதமான உணவுகளுக்கு ஏற்ற வகையில் அமேசான் மற்றும் ஜியோ மார்ட்டில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com