இனி Gmail பாஸ்வேர்ட் மறந்தாலும் பிரச்சனையில்லை.

இனி Gmail பாஸ்வேர்ட் மறந்தாலும் பிரச்சனையில்லை.
Published on

ஜி மெயில் பாஸ்வேர்டை நமக்கு பிடித்தது போல் வைத்துக் கொண்டாலும், சிலருக்கு திடீரென்று என்ன பாஸ்வேர்ட் என்பது மறந்துவிடும். மேலும் பலமுறை ஃபர்கெட் பாஸ்வேர்ட் கொடுத்து நமது கணக்கை மீட்டெடுப்பது சற்று கடினமாகவே இருக்கும். இதை எளிமையாக்கும் வகையில் கூகுள் புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. 

கூகுள் நிறுவனத்தோடு தொடர்புடைய விஷயங்களுக்கு உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர். இந்நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகள் அனைத்துமே இலவசம் என்பதால், நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூகுள் சேவை அனைத்துக்குமே ஜிமெயில் கணக்கு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. 

நீங்கள் உங்களுடைய விவரங்களைக் கொடுத்து ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் தொடங்கினால் போதும், குரோம், பிளே ஸ்டோர், டாக்ஸ், யூடியூப், மேப்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கூகுள் நிறுவனத்தின் செயலிகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஜிமெயில் கணக்கின் பாஸ்வேர்டை ஒருவர் மறந்துவிட்டால், ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்துவதே கஷ்டம் தான். 

பொதுவாகவே சிலருக்கு ஜிமெயில் பாஸ்வேர்டை ஞாபகத்தில் வைத்திருப்பது கடினமாக இருக்கிறது. இவர்கள் பாஸ்வேர்டை மறந்தால், ஃபர்கெட் பாஸ்வேர்ட் கொடுத்து கணக்கை மீட்டெடுப்பார்கள். மேலும் பாஸ்வர்ட் எழுதி வைத்தால் வேறு யாராவது பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்திலும் இருப்பார்கள். முக்கியமான தருணங்களில் பாஸ்வேர்ட் திடீரென்று மறந்துவிடும். அந்த சூழலில் உடனடியாக கணக்கை மீட்டெடுக்க முடியாமல் அவதிப்பட்டிருப்பார்கள். இதை கருத்தில் கொண்டுதான் பாஸ்கீஸ் (Passkeys) என்ற புதிய ஆப்ஷனை கூகுள் கொண்டு வந்துள்ளது. 

Passkeys என்பது, எப்படி ஸ்மார்ட்ஃபோனை ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் பேஸ் லாக் பயன்படுத்தி திறக்கிறோமோ, அதேபோல ஜிமெயில் கணக்கின் பாஸ்வேர்ட் மறந்தால் அதன் உரிமையாளரின் பிங்கர் பிரிண்ட் அல்லது பேஸ்லாக் பயன்படுத்தி உள்ளே நுழையலாம். இந்த அம்சம் You tube க்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

  1. இந்த அம்சத்தை எனேபிள் செய்ய முதலில் நீங்கள் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை திறக்க வேண்டும். 

  2. அதில் உங்களுடைய ப்ரொபைல் பிக்சர் ஐக்கானை தொட்டால், Manage your Google Account என்ற ஆப்ஷன் இருக்கும். 

  3. அதை கிளிக் செய்து உள்ளே நுழைந்ததும், Security என்பதைத் தொடத் வேண்டும். 

  4. பின்னர் அதில் தோன்றும் Passkeys என்பதை கிளிக் செய்தால், உங்களுடைய ஜிமெயில் கணக்கின் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து எனேபிள் செய்து கொள்ளலாம். 

இதன் மூலமாக நீங்கள் உங்கள் கணக்கின் பாஸ்வேர்டை மறந்தாலும், ஃபேஸ் லாக் அல்லது பிங்கர் பிரிண்ட் பயன்படுத்தி உங்கள் ஜிமெயில் கணக்கை எளிதாக அணுகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com