கேப் புக்கிங் முதல் மளிகை பொருள் வரை இனி வாட்ஸ்அப்பில்!

cab booking and groceries now on Whatsapp
cab booking and groceries now on Whatsapp
Published on

வாட்ஸ்அப்பில் இணைக்கப்பட்டுள்ள கூடுதல் பயன்கள்.

வாட்ஸ்அப் இந்தியாவினுடைய பிரதான தொலைதொடர்பு சாதனமாக விளங்கி வருகிறது. வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் இணைக்கப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் மூலம் கேப்பை புக் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் மளிகை பொருட்களை வீட்டில் இருந்த சுலபமாக வாங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும். அப்படி எண்ணற்ற சேவைகளை வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு வழங்கி உள்ளது.

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா ஊபர் நிறுவனத்துடன் ஒப்பந்த மேற்கொண்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் இனி ஊபர் வாடகை வாகனங்களை பயன்படுத்த அச்செயலியை டவுன்லோட் செய்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாறாக வாட்ஸ்அப்பில் வழியாக ஊபர் வாடகை வாகனங்களை புக் செய்ய முடியும். இதற்கு +91 72920 00002 என்ற எண்ணை சேவ் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த குறிப்பிட்ட நம்பருக்கு வாட்ஸ்அப்பில் ஹாய் என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதைத் தொடர்ந்து புறப்படும் இடம் மற்றும் சேரும் இடங்களை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். உடனே ஊபர் நிறுவனத்தின் சார்பில் கட்டணம் மற்றும் டிரைவரின் விவரம் தெரிவிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப் கணக்கை இமெயில் வெரிஃபிகேஷன் செய்வது எப்படி? 
cab booking and groceries now on Whatsapp

மேலும் மெட்டா நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜியோ மார்ட் நிறுவனத்தில் உள்ள பொருட்களை வாட்ஸ்அப் வழியாக வாங்க முடியும். இதற்காக +91 79770 79770 என்ற எண்ணை சேவ் செய்து கொண்டு அதற்கு ஹாய் என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஜியோ மார்ட் நிறுவனத்தில் உள்ள பொருட்களைப் பற்றிய விவரங்கள் காண்பிக்கப்படும். அவற்றில் தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். பிறகு proceed to check out செய்து UPI மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் வாட்சப் வழியாக மெட்ரோ டிக்கெட்டை பதிவு செய்யும் முறை டெல்லியை தொடர்ந்து சென்னை மெட்ரோவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com