உலகெங்கிலும் உள்ள ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பிராண்டான ஆப்பிள் நிறுவனம், தங்களின் அடுத்த சீரிஸ் ஐபோன் 15 மாடல்களை நேற்று வெளியிட்டது. இது சரியாக நேற்று இரவு இந்திய நேரப்படி 10:30 மணியளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நேற்று நடந்த Wanderlust நிகழ்ச்சியில் ஆப்பிள் வாட்ச் எஸ் 9 சீரியஸையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த வாட்ச் சுமார் 18 மணி நேரம் பேட்டரி திறன் போன்ற புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் மேலும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை இணைத்துள்ளனர். இந்திய மதிப்பில் இந்த வாட்சின் ஆரம்ப விலை 41 ஆயிரத்து 900 முதல் துவங்குகிறது. மேலும் இந்த மாடலின் அதிகபட்ச விலை 81 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல நேற்று அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 மாடல்களின் விலை விவரங்களும் வெளிவந்துள்ளது. அதன்படி 6.1 இன்ச் திரையளவு கொண்ட iphone 15 தொடக்க விலை இந்தியாவில் 79,900 முதல் 1,09,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6.7 இஞ்சி திரையளவு கொண்ட ஐபோன் 15 பிளஸ் மாடலின் விலை 89,900 முதல் 1,19,900 ஆகவும், ஐபோன் 15 ப்ரோவின் விலை 1,34,900 முதல் 1,84,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 6.7 இன்ச் திரையளவு கொண்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் விலை 1,59,900ல் தொடங்கி 1,99,900 வரை அதிக விலை கொண்டதாக உள்ளது.
ஐபோன் 15 மாடலின் விலை குறைவாக வரும் என எண்ணிக் கொண்டிருந்த ஐபோன் பிரியர்கள். இந்த விலை விவரங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் எப்போதும் போலவே விலை அதிகமாக இருந்தாலும் ஐபோன் 15 மாடலுக்கான புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.