கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்க்ரீனில் பிரச்சனையா? சாம்சங் விளக்கம்!

கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்க்ரீனில் பிரச்சனையா? சாம்சங் விளக்கம்!

தனது புதிய அறிமுகமான எஸ் 23 அல்ட்ரா ஸ்க்ரீனில் சுருக்கம் அல்லது குமிழி தோன்றும் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையல்ல என்றும், திரையின் செயல்பாடு அல்லது ஆயுளை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் சாம்சங் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சாம்சங் அதன் மிக சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது - Galaxy S23 Ultra ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட்டைக் கொண்டுள்ள இந்த ஃபோன், 200எம்பி கேமராவுடன் வருகிறது, இப்போது பணம் கொடுத்து வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.

இருப்பினும்,அறிமுகமான புதிதிலேயே சுடச்சுட அதை வாங்கித் தங்கள் கைகளில் ஏந்தி அழகு பார்த்த முன்வரிசை பயனாளர்களில் சிலர் உடனடியாகக் கவனித்தது என்னவோ அதன் குறைபாட்டைத்தான். அதன் அல்ட்ரா ஸ்கிரீனில் ஒரு சிக்கல் இருப்பதாக அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதாவது, பல Galaxy S23 Ultra உரிமையாளர்கள் திரையில் ஒரு சுருக்கம் அல்லது குமிழியைப் பார்ப்பது போல் உணர்கிறோம் என்கிறார்கள். பெரும்பாலானவர்கள் குறைபாடு திரையின் இடது அல்லது வலது கீழ்ப்பக்கத்தில் இருப்பதாகக் கூறினாலும், சிலருக்கு இருபுறமும் சுருக்கங்கள் தெரியும்படியாகவும் இருக்கிறது என்று தகவல்.

ஆனால் இந்தக் குமிழ்கள் அல்லது சுருக்கங்களை பிரகாசமான ஒளியின் கீழ் மட்டுமே பார்க்க முடியும். ட்விட்டரில் கேலக்ஸி S23 ஸ்க்ரீன் சிக்கல் குறித்து மக்கள் புகார் செய்த பிறகு, கேலக்ஸி S23 அல்ட்ராவில் உள்ள கண்ணாடியில் டிஸ்ப்ளே பேனலுடன் பல அடுக்கு கண்ணாடிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று சாம்சங் விளக்கியது.

நீங்கள் திரையில் ஒரு பிரகாசமான ஒளியைப் பாய்ச்சினால், டிஸ்ப்ளேவின் சில பகுதிகள் நசுக்கப்பட்டது போலவோ அல்லது அழுத்தியது போலவோ தோன்றலாம். இது பெரும்பாலும் வாட்டர் ப்ரூபிங் (Water proofing & Dust proofing) மற்றும் தூசி-தடுப்பு செயல்முறையின் விளைவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று நிறுவனம் கூறியது அத்துடன் இது ஒரு தயாரிப்பு குறைபாடு அல்ல என்றும் கூட சாம்சங் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தச் சிக்கலின் காரணமாக, சில பயனாளர்கள் தங்கள் Galaxy S23 Ultra ஐத் திருப்பிக் கொடுத்து விட்டு, ரீப்ளேஸ்மெண்ட்டாகக் கிடைத்த புதிய சாதனத்திலும் அதே பிரச்சனை இருப்பதைக் கண்டறிய, இதற்கான நிரந்தரத் தீர்வு தான் என்ன? என்றூ கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், சாம்சங் இப்போதும் தனது தைவான் இணையதளத்தின் ஒரு பிரத்யேகப் பக்கத்தில் என்ன சொல்கிறது என்றால்?

‘இது இது ஒரு சாதாரண நிகழ்வு, ஸ்மார்ட் ஃபோனின் காட்சி செயல்பாடு அல்லது ஆயுளை எந்த வகையிலும் இது பாதிக்காது’ - என்றே தெளிவாகத் தெரிவிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com