
கூகுள் கடவுச்சொல் சேமிப்பு பக்கத்தில் கூடுதல் அம்சம் இணைப்பு.
இணைய பாதுகாப்பை உறுதி செய்வதில் கூகுள் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இணையதளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய செயலிகள், பல்வேறு வகையான பக்கங்கள் பல நடவடிக்கைகளுக்கு மக்கள் கடவுச்சொற்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் பல்வேறு வகையான கடவுச்சொற்களை நியாபகம் வைத்துக் கொள்ள முடியாத பலருக்கும் கூகுள் சேமிப்பு செயலியாகவும் செயல்படுகிறது. இவ்வாறு கூகுள் குரோம்யில் பல்வேறு வகையான கடவுச்சொற்கள் சேமிக்கப்பட்ட பாதுகாக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் அதிகரித்து வரும் இணைய குற்றங்களை தடுப்பதற்காகவும், சம்பந்தப்பட்ட இணைய கணக்கை அதன் உரிமையாளர் தான் பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்யவும், ஏதேனும் சமரசம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும் டெஸ்க் டாபின் பின்னணியில் குரோமின் பாதுகாப்பு அம்சம் தானாக இயங்கும். மேலும் குரோமில் உள்ள மூன்று புள்ளி மெனு வழியாக பாதுகாப்பு சம்பந்தமாக நடவடிக்கை விரைவாக செயல்படுத்த முடியும்.
இதன் மூலம் பயனாளர்களின் நிலை தன்மை உறுதிப்படுத்தப்பட்டு, கடவுச்சொல் சம்பந்தமான எச்சரிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் எளிதில் சுலபமாக கடவுச்சொல்லை மற்றும் நடவடிக்கைகள் செய்ய முடியும்.
மேலும் கடவுச்சொல் பற்றிய ஈமெயில்கள் இன்பாக்ஸ் பக்கத்தில் டாப் லிஸ்ட்டாக காட்டப்படும். இதன் மூலம் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் சுதாரித்துக் கொண்டு கணக்கை தற்காலிகமாக முடக்கவோ அல்லது கடவுச்சொல்லை விரைவாக மாற்றவும் முடியும்.