Circle to Search: டைப் செய்து இனி எதையும் தேட வேண்டாம்.. வட்டம் போட்டா மட்டும் போதும்!

Circle to Search
Circle to Search

உலகிலேயே மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி தான். இது ஒரு நாளைக்கு சுமார் 8 பில்லியனுக்கும் அதிகமான முறை பிராசஸ் செய்யப்பட்டு, 1 நொடிக்கு உலக அளவில் 1 லட்சம் சர்ச்சுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கூகுளில் Circle to Search என்ற புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதுவரை கூகுளில் எதையாவது ஒன்றை தேட வேண்டும் என்றால் நமக்கு என்ன வேண்டும் என்பதை டைப் செய்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இதை மேலும் எளிதாக்கும் வகையில் புகைப்படங்களை வைத்து தேடுவதற்கு Google Lens அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது புகைப்படங்களில் உள்ள விஷயங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள அந்த புகைப்படத்தை உள்ளீடு செய்வது மூலமாகவோ அல்லது கேமரா மூலம் படம் பிடிப்பது மூலமாகவோ நமக்கான விவரங்களை கூகுள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். 

இந்த அம்சத்தைத் தொடர்ந்து கூகுளை அனைவரும் அணுக வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் ஒரு புதிய அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. எனவே இந்த புதிய அம்சம் மூலமாக கூகுளில் நீங்கள் ஏதாவது சர்ச் செய்ய வேண்டுமென்றால் இனி டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எதைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அதை உங்கள் போன் டிஸ்ப்ளேவில் வட்டமிட்டு சுட்டிக் காட்டினால் போதும். அது என்ன என்பதை தானாகவே கண்டுபிடித்து கூகுள் உங்களுக்கு விவரங்களைக் கொடுத்துவிடும். 

இந்த அம்சத்தை பயன்படுத்த உங்கள் சாதனத்தின் ஹோம் பட்டனை லாங் பிரஸ் செய்தால், Circle to Search அம்சம் ஆக்டிவேட் ஆகிவிடும். இப்போது உங்கள் டிஸ்ப்ளேவில் தெரிவதை வட்டமிட்டு எளிதாக தேடிக் கொள்ளலாம். முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் இந்த அம்சத்தை, முதல்முறையாக சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள்:
நீங்கள் அதிகம் Instagram பயன்படுத்தும் நபரா? இனி இரவில் நிம்மதியாக தூங்கலாம்! 
Circle to Search

இந்த புதிய அம்சத்தை வரும் ஜனவரி 31 ஆம் தேதி முதல் சாம்சங் கேலக்ஸி எஸ்24 பயனர்கள் மற்றும் கூகுள் பிக்சல் 8 சாதனங்களில் அணுக முடியும். இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் பல பிரிமியம் ரக ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த அம்சம் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com