2 வருடங்களுக்கு மேலாக லாக் இன் செய்யப்படாமல் இருக்கும் இமெயில் அக்கவுண்ட்களை நீக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக லாக்கின் (log in) செய்யப்படாமல் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை இந்தாண்டு டிசம்பர் 31-ம் முதல் நீக்கத் தொடங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. அச்சுறுத்தல் மற்றும் அக்கவுண்ட்களைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இதை செய்வதாக நிறுவனம் கூறியுள்ளது.
கூகுள் நிறுவனம் இன்-ஆக்டிவ் அக்கவுண்ட்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பயனருக்கு பல்வேறு முறை இ-மெயில் மூலம் தெரியப்படுத்தும். இன்-ஆக்டிவ் அக்கவுண்ட், நீங்கள் பயன்படுத்தும் அக்கவுண்ட்களுக்கு என பல்வேறு முறை இ-மெயில் அனுப்பும். அப்போது நீங்கள் அக்கவுண்டை ஆக்டிவேட் செய்யலாம்.
மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?
நீண்ட நாட்களாக லாக் இன் செய்யப்படாமல் உள்ள மெயிலில் பல டேட்டாக்கள் பதிவாகியிருக்கும். இதனால், உடனே அந்த அக்கவுண்டை மீண்டும் லாக் இன் செய்ய வேண்டும். அப்படி அந்த அக்கவுண்டின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால், ஃபர்காட் பாஸ்வேர்டு என்று கொடுத்து அக்கவுண்டை ரெக்கவரி செய்து கொள்ளலாம்.
வரும் டிசம்பர் மாதம் வரையே கால அவகாசம் உள்ளதால் உடனே அக்கவுண்டை திரும்ப பெற்று கூகுள் புகைப்படம், டேட்டா, போன் நம்பர்ஸ் என அனைத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அக்கவுண்ட் முழுமையாக டெலிட் ஆகிவிடும்.