கூகுள் பே-ல் UPI Lite சேவை அறிமுகம்.

யுபிஐ பண பரிவர்த்தனை
யுபிஐ பண பரிவர்த்தனை
Published on

UPI Lite  என்ற புதிய அம்சத்தை கூகுள் பே புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதைப் பயன்படுத்தி பின் நம்பர் இல்லாமலேயே பணம் செலுத்தலாம். 

இந்தியாவில் இருக்கும் பயனர்களுக்கென்றே பிரத்தியேகமாக UPI Lite என்ற அம்சத்தை கூகுள் பே வெளியிட்டுள்ளது. இதை கூகுள் பே பயன்படுத்துவது போலவே பயன்படுத்தலாம் என நினைக்க வேண்டாம். இது சற்று வித்தியாசமாக இயங்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு சிறிய தொகையை இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பின் நம்பர் உள்ளிடாமல் பரிமாற முடியும். 

தற்போது எல்லா இடங்களிலும் யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரித்துவிட்டது. மளிகை சாமான் வாங்குவது, டீ குடிப்பது, உணவருந்துவது, கேஸ் புக்கிங் போன்ற அனைத்திற்கும் மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சிறு பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றாலும், அதற்காக பின் நம்பர் உள்ளீடு செய்வது பயனர்களுக்கு கஷ்டமாக இருப்பதால், கூகுள் பே வின் யுபிஐ லைட் சேவையைப் பயன்படுத்தி சிறிய பணத்தொகையை பின் நம்பர் இன்றி பரிமாற்றம் செய்யலாம். 

பயனர்கள் அவர்களின் யுபிஐ லைட் கணக்கிலிருந்து 200 ரூபாய் வரை மட்டுமே அதிகபட்சமாக அனுப்ப முடியும். இந்த அம்சத்தின் முக்கிய நோக்கமே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிமையாகவும் வேகமாகவும் மேற்கொள்வது தான். யுபிஐ லைட் நேரடியாக பயனர்களின் வங்கிக் கணக்கில் இணைக்கப் பட்டிருந்தாலும், அது ஒவ்வொரு முறையும் வங்கியின் அனுமதியை நம்பி இருக்காது.

முன்கூட்டியே உங்களின் வங்கி கணக்கிலிருந்து யுபிஐ லைட் பகுதிக்கு ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை டெபாசிட் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்தப் பணத்தை தான் பின் நம்பர் இன்றி உங்களால் மளிகை கடைகளிலோ டீக்கடைகளிலோ பயன்படுத்த முடியும். ஏற்கனவே இந்த சேவை பேடிஎம், போன் பே போன்ற தளங்களில் அறிமுகம் செய்திருந்தாலும், இப்போதுதான் google pay இதை அறிமுகம் செய்துள்ளது. 

தற்போது இதை 15 வங்கிகள் மட்டுமே ஆதரிக்கும் நிலையில், எதிர்காலத்தில் மேலும் சில வங்கிகள் இதற்கான ஆதரவை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com