கூகுளின் 168 பில்லியன் டாலர் வருவாய் கேள்விக்குறி?! காரணம் தெரியுமா?

கூகுளின் 168 பில்லியன் டாலர் வருவாய் கேள்விக்குறி?! காரணம் தெரியுமா?

2015 நவம்பரில், பாரிஸ் நகரில் இஸ்லாமியர்கள் நடத்திய தாக்குதலில், கிட்டத்தட்ட 130 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அமெரிக்க குடிமகன் 'நோமின் கோன்சலசின்' என்ற 23 வயது இளைஞரின் குடும்பத்தினரால் கூகுள் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது. 

சமூக வலைதளத்திற்கு சென்றாலே, பல்வேறு விதமான விளம்பரங்கள் கண் முன்னே தோன்றி கடுப்பை ஏற்படுத்தும். இதிலும் குறிப்பாக ரம்மி விளம்பரங்கள், பணத்தை முதலீடு செய்யச் சொல்லும் விளம்பரங்களுக்கு பஞ்சமே இல்லை. அரசாங்கமும் இதுபோன்ற இணைய விளம்பரங்களுக்கு சமூக வலைதளத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. இதை பலரும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. 

கூகுள் நிறுவனத்திற்கு பெரும்பாலும் விளம்பரங்கள் வாயிலாகவே அதிகப்படியான வருவாய் வருகிறது. ஆட்டோ ரெக்கமண்டேஷன் என்ற பெயரில் இணையதளங்கள் மற்றும் விளம்பர நெட்வொர்க், பயனர்களைப் பற்றி அவர்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இருப்பிடம், ஹிஸ்டரி, அவர்கள் நெருக்கமாக பின்தொடரும் தலைப்புகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் தானாகவே விளம்பரங்களை உரிய நபர்களுக்கு காட்டுகிறது. 

மனிதர்களின் பங்களிப்பு இல்லாமலே, ஆன்லைன் கருவிகள் மூலமாக, விளம்பரங்களை இளையதளம் வாயிலாகவும் யூடியூபிலும் காட்டப்படுகிறது. எனவே 2015 தாக்குதலுக்கு முழு காரணம் யூட்யூபில் இஸ்லாமியர்கள் சார்ந்து காட்டப்பட்ட விளம்பரங்கள் தான் என்று அக்குடும்பத்தினர் வாதிடுகிறார்கள். 

"இந்த வழக்கு ஒட்டுமொத்த விளம்பரச் சூழலையும் மோசமாக பாதிக்கும்" என்று உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டார்கெட் விளம்பரங்களை வழங்கும் விளம்பர நிறுவனமான, DMA United-ன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெக்மேன் கூறினார். 

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் மட்டுமே, உலகளவில் அனைத்து டிஜிட்டல் விளம்பர வருவாயில் கிட்டத்தட்ட 50% கைப்பற்றி இருக்கிறது. ஆன்லைன் விளம்பரத்தின் "Duopoly" என்று குறிப்பிடும் நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை வழங்குவதற்காக அவர்களின் தரவுகளை சேகரிக்கிறது. இதன் மூலமாக இந்த இரு நிறுவனங்களும் ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது. 2022ல் உலகளவில் கூகுள் நிறுவனம் $168 பில்லியனும், Meta நிறுவனம் $112 பில்லியனும் வருவாயாகப் பெற்றுள்ளார்கள் என்று இன்சைடர் இன்டெலிஜென்ஸ் என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற சட்ட சிக்கல்களை ஏற்கனவே இவ்விரு நிறுவனங்களும் எதிர்கொண்டுள்ளது. அவை அனைத்துமே பிரிவு 230ன் படி, நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு சில நிபந்தனைகளுடன் இந்நிறுவனங்கள் வெற்றி கண்டுள்ளன. 

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் அனுமதியின்றி மக்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்களின் தனி உரிமை சமூக வலைதளங்கள் மீறுவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே டிஜிட்டல் விளம்பரத்துறை இதுபோன்ற பல விமர்சனங்களுக்கு மத்தியில்தான் செயல்பட்டு வருகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் உள்ள தனியுரிமை விதிமுறைகள் பயனர்களிடம் சேகரிக்கப்படும் தரவுகளை பயன்படுத்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்த கட்டுப்பாடுகள் டிஜிட்டல் விளம்பர சுற்றுச்சூழலில், பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திள்ளது. இதனால் அந்நிறுவனங்களுக்கு பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com