தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை எலான் மஸ்க் இல்லாத இடமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் எலான் மஸ்க் அவர்களின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான xAI, GORK AI என்ற புதிய சாட் பாட்டை அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்திருந்தது.
இப்போது இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்ற தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே ட்விட்டர் எக்ஸ் பிரீமியம் பயன்பாட்டாளர்கள், இந்த GORK AI சாட் பாட்டை அவர்களின் கணக்கிலிருந்தே பயன்படுத்த முடியும். அதேபோல எக்ஸ் ப்ரீமியம் விண்டோஸ் வெர்ஷனிலும் இதை பயனர்கள் பயன்படுத்தலாம்.
தொடக்கத்தில் அமெரிக்காவில் மட்டுமே எக்ஸ் ப்ரீமியம் பயன்படுத்துவோர் இந்த ஏஐ அம்சத்தை பயன்படுத்தலாம் என சொல்லப்பட்ட நிலையில், இப்போது சிங்கப்பூர் இலங்கை நியூசிலாந்து கன்னடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த Chatbot அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. குறிப்பாக ChatGPT, கூகுள் பார்டு போன்ற பிரபலமான AI சேட் பாட்களுடன் ஒப்பிடுகையில், இது முற்றிலும் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
மற்ற AI கருவிகளால் பதில் அளிக்க முடியாத கேள்விகளுக்குக் கூட இது துல்லியமாக பதில் அளிக்கும் என சொல்லப்படுகிறது. இதை எக்ஸ் தளத்திலிருந்து நிகழ் நேரத்தில் எல்லா தகவல்களையும் சேகரித்து பதில்களை ஒன்றிணைத்துத் தருகிறது. ஆனால் கூகுள் பார்ட் மற்றும் ChatGPT போன்றவை இணையத்தில் உள்ள தகவல்களை ஒன்றிணைத்து கொடுக்கின்றன. நீங்கள் எக்ஸ் ப்ரீமியம் + சந்தாதாரராக இருந்தால், இலவசமாகவே இதை உங்களால் பயன்படுத்த முடியும்.
அதே நேரம் எக்ஸ் பிரீமியம் + திட்டத்திற்கு மாதம் 1300 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.