meta property="og:ttl" content="2419200" />

SMS பயன்படுத்தி ஈசியாக ஒருவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் ஹேக்கர்கள்.

SMS பயன்படுத்தி ஈசியாக ஒருவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் ஹேக்கர்கள்.
Published on

ன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதென்பது நாம் அனைவருக்குமே தெரியும். அத்தகைய சாதனங்களில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல அம்சங்கள் பொருத்தப் பட்டிருந்தாலும், அதிலுள்ள சிறிய குறைகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் மற்றவர்களின் ஸ்மார்ட் ஃபோன்களை ஹேக் செய்து விடுகிறார்கள். 

அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், ஸ்மார்ட் ஃபோன்களில் இருக்கும் முக்கிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்.எம்.எஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்தி, அவர்களின் இருப்பிடத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம் என அந்த ஆய்வுக்குழு நிருபித்துள்ளது. மிஷின் லேர்னிங் என்ற ப்ரோக்ராமைப் பயன்படுத்தி, பயனர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் வாயிலாக, அவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும். 

குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்ஃபோன்களில் எஸ்எம்எஸ் பயன்படுத்தி எளிதாக ஹேக் செய்ய முடியும் என்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்று ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இருக்கும் இந்த முக்கியக் குறைபாட்டைக் கண்டறிந்துள்ளது. 1990களில் இருந்தே எஸ்.எம்.எஸ் சிஸ்டம் மொபைல் ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் டேட்டாவை, மெஷின் லேர்னிங் முறையில் உருவாக்கி, நவீன ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்பி அந்த சாதனம் இருக்குமிடத்தை அவர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஒரு ஸ்மார்ட்போனின் இருப்பிடத்தைக் கண்டறிய அந்த சாதனத்தின் நெட்வொர்க் ஆக்ஸஸ் மற்றும் அந்த போனின் நம்பர் போதுமானது. இதைப் பயன்படுத்தி அந்த போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி, அது எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். இது எப்படி முடிகிறதென்றால், ஸ்மார்ட்போன்கள் வெளிவந்த பிறகு அதன் பாதுகாப்பிற்காக பல அம்சங்கள் மேம்படுத்தப் பட்டிருந்தாலும், அதில் உள்ள எஸ்எம்எஸ் சிஸ்டத்தை பொருத்தவரை தொடக்கத்திலிருந்தே இன்றுவரை குறைவான பாதுகாப்பு அம்சங்களுடன் எவ்வித மேம்படுத்தல்களும் இல்லாமல் இருக்கிறது. 

அதேசமயம் அந்த ஆய்வுக்குழு கண்டறிந்துள்ள இந்த மெஷின் லெர்னிங் முறையை ஹேக்கர்கள் பயன்படுத்துவதற்கு சவாலாக இருக்கும் என்றும். ஒரு ஸ்மார்ட்போனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க பல இடங்களில் இருந்து பல ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் இது ஒரு முக்கியக் குறைபாடாகப் பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இதற்குத் தீர்வுகாணும் வகையில் மேம்படுத்தல்கள் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com