உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் தேடுபொறி கூகுள் குரோம். இது மிகவும் பிரபலமான வேகமாக செயல்படும் பிரவுசராக உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் என எல்லாவற்றிலும் இதைப் பயன்படுத்தலாம்.
என்னதான் இது வேகமான பிரவுசராக இருந்தாலும் சிலருக்கு குரோம் ஸ்லோவாக செயல்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் ‘ஹார்ட்வேர் ஆக்ஸிலரேஷன்’ எனப்படும் புதிய அம்சத்தை எனேபிள் செய்யலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலமாக வெப் பேஜ் வேகமாக லோடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
முன்பெல்லாம் கூகுள் குரோம் கணினியில் இயக்கப்படும்போது, வெப் பேஜ்களை நமக்கு காண்பிக்க CPU மற்றும் மென்பொருளை பயன்படுத்தும். ஆனால் இப்போது ஹார்ட்வேர்ட் ஆக்ஸிலரேஷன் அம்சத்தை பயன்படுத்தும்போது வெப் பேஜ்களை வேகமாக லோடு செய்வதற்கு கணினியின் கிராபிக்ஸ் கார்டை பயன்படுத்தும். எனவே முன்பை விட இந்த அம்சம் மூலமாக கூகுள் குரோம் வேகமாக செயல்படும்.
இந்த புதிய அம்சத்தை எனேபிள் செய்வதற்கு முதலில் கூகுள் குரோம் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
பின்னர் அதில் காட்டப்படும் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, Use Hardware acceleration when available என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து, குரோமை ரீலான்ச் கொடுத்தால் உடனடியாக இந்த அம்சம் கூகுள் குரோமில் ஆக்டிவேட் ஆகிவிடும்.
ஒருவேளை இதை எனேபிள் செய்த பிறகு உங்கள் சாதனத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படுவது போல தோன்றினால், நீங்கள் விருப்பப்பட்டால் இந்த செட்டிங்ஸை டிசேபிள் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் தற்போது கணினி பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும் போது கூகுள் குரோம் முன்பை விட மிகவும் வேகமாக செயல்படும்.
இந்த புதிய அம்சத்தால் கூகுள் குரோம் பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இனி ஒரு வெப்ப பேஜை லோடு செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். உடனடியாக கணினியில் உள்ள ஹார்டுவரை பயன்படுத்தி அனைத்தையும் வேகமாக முடித்து விடும் இந்த புதிய ஹார்ட்வேர் ஆக்ஸிலரேஷன் சிஸ்டம். உங்கள் சாதனத்தில் இது இன்னும் எனேபிள் செய்யப்படவில்லை என்றால் உடனடியாக எனேபிள் செய்யுங்கள்.